டி. ஏ. மதுரம்

இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia

டி. ஏ. மதுரம்
Remove ads

டி. ஏ. மதுரம் (1918 -1974) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகையும் பாடகியும் ஆவார்.

Thumb
என். எஸ். கிருஷ்ணன் &
டி.ஏ. மதுரம் (பைத்தியக்காரன்1947)
விரைவான உண்மைகள் டி.ஏ. மதுரம், பிறப்பு ...

திருச்சியில் 1918ஆம் ஆண்டு ஒரு கலைக்குடும்பத்தில் பிறந்தார்.[1] அவரது கணவர் என். எஸ். கிருஷ்ணன் திரை அறிமுகம் பெற்ற 1935லேயே தனிப்பட்ட முறையில் மதுரமும் திரைப்படங்களில் அறிமுகம் ஆனார்.[2] அப்போது அவர் பெயர் டி.ஏ. மதுரம் அல்ல, ”டி. ஆர். ஏ. மதுரம்”. இவரது முதல் திரைப்படம் ரத்னாவளி (1935).[3] திருப்பூர் டாக்கீஸ் லிமிடெட் புனேவில் எடுத்த படம் ‘வசந்தசேனா'வில் (1936) கிருஷ்ணனுடன் முதன்முதலாக நடித்தார். அதன் பின்பு அவரின் இணையாகவே நடித்தார். நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என தனது கணவருடன் நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார்.

Remove ads

நடித்த திரைப்படங்கள்

  1. ரத்னாவளி (1935)
  2. பக்த துளசிதாஸ் (1937)
  3. அம்பிகாபதி (1937)
  4. மாயா மச்சீந்திரா (1939)
  5. ராமலிங்க சுவாமிகள் (1939)
  6. பிரகலாதா (1939)
  7. நவீன விக்ரமாதித்தன் (1940)
  8. அசோக் குமார் (1941)
  9. ஆர்யமாலா (1941)
  10. கண்ணகி (1942)
  11. மனோன்மணி (1942)
  12. சிவகவி (1943)
  13. மங்கம்மா சபதம் (1943)
  14. ஹரிதாஸ் (1944)
  15. பூம்பாவை (1944)
  16. பர்த்ருஹரி (1944)
  17. பைத்தியக்காரன் (1947)
  18. சந்திரலேகா (1948)
  19. நல்ல தம்பி (1949)
  20. ரத்னகுமார் (1949)
  21. மங்கையர்க்கரசி (1949)
  22. இன்பவல்லி (1949)
  23. பாரிஜாதம் (1950)
  24. லைலா மஜ்னு (1950)
  25. வனசுந்தரி (1951)
  26. பணம் (1952)
  27. வேதவதி அல்லது சீதா ஜனனம்

*(முழுமையான பட்டியல் அல்ல)

Remove ads

மறைவு

மதுரம், மே மாதம் 23 ஆம் தேதி 1974ஆம் ஆண்டு காலமானார்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads