டி. ரங்காச்சாரி
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
டி. ரங்காச்சாரி (T. Rangachari) (1865–1945) இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி, ஊடகவியலாளர், இந்திய மத்தியச் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் இந்திய விடுதலை இயக்க வீரர் ஆவார்.
இளமை வாழ்க்கை
ரங்காச்சாரி, சென்னை மாகாணத்தில் அய்யங்கார் நிலக்கிழார் குடும்பத்தில் 1865ல் பிறந்தவர்.[1]
இவர் சட்டப் படிப்பை சென்னையில் முடித்தவர்.[1]
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்னர் வெற்றிகரமான வழக்கறிஞாரக இருந்தவர். 1927-28ல் ரங்காச்சாரி தலைமையில் திரைப்பட தணிக்கைக் குழு நிறுவப்பட்டது.[2]
அரசியல்
சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக பணியாற்றியவர்.
சென்னை மாகாணச் சட்டமன்றம் மற்றும் இந்திய மத்தியச் சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் பின்னர் அதன் துணை அவைத் தலைவராகவும் இருந்தவர்.
மறைவு
ரங்காச்சாரி 1945ல் தமது எண்பதாவது அகவையில் மறைந்தார்.
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads