டேவிட் கொரேஷ்

From Wikipedia, the free encyclopedia

டேவிட் கொரேஷ்
Remove ads

டேவிட் கொரேஷ் (David Koresh, இயற்பெயர்: வெர்னான் வேய்னெ ஹொவெல், 17 ஆகத்து 1959 – 19 ஏப்பிரல் 1993) ஐக்கிய அமெரிக்கா, டெக்சாஸ் மாநிலம்,வகோ நகர்புறத்தில் அமைந்த மவுண்ட் கார்மல் மையத்தில் செயல்பட்ட கிறித்தவ மதப் பிரிவுகளில் ஒன்றான தாவீது கிறித்தவ மதப்பிரிவின் தலைவர். தன்னைத்தானே இறைவனின் இறுதி தீர்க்கதரிசி (prophet) என்றும் இறைமகன் (Son of God) என்றும் அறிவித்துக் கொண்டவர்.[2] [3].

விரைவான உண்மைகள் டேவிட் கொரேஷ், பிறப்பு ...
Thumb
மவுண்ட் கார்மல் மையத்தில் அமைந்த டேவிட் கொமரேஷின் தலைமையக கட்டிடம் எரியும் காட்சி, 19 ஏப்பிரல், 1993

பிப்ரவரி 1993இல் டேவிட் கொரேஷின் குற்ற நடவடிக்கைகளையும், போலியான மத இயக்கத்தை கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த ஐக்கிய அமெரிக்காவின் காவல் துறை (FBI), டெக்சாஸ் மாநிலத்தின், மெக்லென்னன் கவுண்டியின், வகோ (Waco) நகர்புறத்தில் அமைந்த டேவிட் கொரேஷின் இயக்ககத்தின் தலைமையகக் கட்டிடத்தைச் சுற்றி வளைத்து, டேவிட் கொரேஷ் உட்பட அனைவரையும் சரண் அடையக் கட்டளையிட்டனர். [4]

காவல் துறையின் ஆணையை ஏற்க மறுத்த டேவிட் கொரேஷும் அவனது கூட்டாளிகளும், 51 நாட்கள் நடந்த கடுமையான போராட்டத்திற்குப் பின், தங்கள் இயக்க கட்டிடத்திற்கு தாங்களே தீ வைத்துக்கொண்டனர். இதனால் காவல் துறையினரின் பிடியில் சிக்காமல் 17 வயதிற்குட்பட்ட 23 குழந்தைகளும் உட்பட மொத்தம் 80 நபர்கள் தீயில் கருகி இறந்தனர். டேவிட் கொரேஷ் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்தார்.[5][6]

டேவிட் கொரேஷ் மற்றும் அவனின் கூட்டாளிகளின் மரணம் குறித்து, ஐக்கிய அமெரிக்காவில் இன்றளவும் சர்ச்சைக்குரிய விசயமாகவே பேசப்படுகிறது.[7]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads