டேவிட் சசூக்கி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

டேவிட் ரக்யோசி சசூக்கி (ஆங்கிலம்: David Takayoshi Suzuki, பிறப்பு மார்ச் 24, 1936) ஒரு கனடிய அறிவியல் பேராசிரியர், அறிவியல் ஊடகவியலாளர், சூழலியல் செயற்பாட்டாளர். விலங்கியலில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் 1963 இருந்து 2001 வரை பிறட்டிசு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியாராகப் பணிபுரிந்தார். 1970 களில் இருந்து இவர் சி.பி.சி தொலைக்காட்சியில் தொகுத்த நேற்சர் ஒப் திங்சு (Nature of Things, தமிழில்: பொருட்களின் இயல்புகள்) என்ற ஆவணத் தொடருக்காகப் பெரிதும் அறியப்படுகிறார். சூழலியல் விடயங்கள் தொடர்பாக பல்வேறு வானொலி நிகழ்ச்சிகளைத் தொகுத்துள்ளார், நூல்களை எழுதியுள்ளார். சூழலியல் விடயங்கள் தொடர்பாக அரச செயற்பாடுகளின் விமர்சகரும் ஆவார்.

இவரது பெயரில் இயங்கும் டேவிட் சசூக்கி அறக்கட்டளை ஒரு சூழலியல் அமைப்பு ஆகும்.

Remove ads

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads