டேவிட் மெக்காலே
From Wikipedia, the free encyclopedia
Remove ads
டேவிட் மெக்காலே (David Macaulay திசம்பர் 2, 1946) என்பவர் பிரிட்டிசு அமெரிக்க எழுத்தாளர் மற்றும் நூலாசிரியர் ஆவார். 2006 ஆம் ஆண்டுக்குரிய மக்கார்த்தர் உதவித் தொகை 500000 அமெரிக்க டாலர்கள் பெற்று மதிக்கப்பட்டவர். பழம் நாகரிகங்களின் சிற்ப மற்றும் பொறியியல் சாதனைகளை இவர் விளக்கிய திறத்தைப் பாராட்டி இந்தப் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.[1]

இளமைக் காலம்
இவரது 11 ஆம் அகவையில் இவரது குடும்பம் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவில் உள்ள பூளும்பீல்டுக்கு (நியூ ஜெர்சி) குடியேறியது. இளைஞனாக இருக்கும்போதே வரையும் திறமையை வளர்த்துக் கொண்டார். கல்லூரியில் படித்துக் கட்டடக்கலைத் துறையில் பட்டம் பெற்றார். பள்ளி ஆசிரியராகவும், உட்புற வடிவமைப்பாளராகவும் பணிகள் ஆற்றினார். பிறகு நூல்கள் எழுதத் தொடங்கினார்.
எழுதிய நூல்கள்
கட்டடக்கலை பற்றியும், வடிவமைப்பு பற்றியும் பல நூல்களை எழுதினார். எகிப்தில் உள்ள பிரமிடுகள், நியூயார்க்கில் உள்ள மிக உயரமான கட்டடங்கள், ஆகியவற்றைக் கட்டிய மனிதர்களின் கட்டடக்கலைத் திறமைகள் பற்றியும் பொறியியல் அறிவு பற்றியும் விரிவாகக் காட்சிப்படுத்தி விளக்கியும் நூல்களில் எழுதினார். அவை பிபிஎஸ் தொலைக்காட்சிளிலும் ஒளிபரப்பாகின.
1973 இல் 'கதீட்ரல்' என்ற ஒரு நூலை முதலில் எழுதி வெளியிட்டார். மற்ற நூல்களான சிட்டி, காசில், பிரமிட், மில் அண்டர்கிரவுண்ட், அன்பில்டிங், பிளாக் அண்ட் ஒயிட் என்பவற்றையும் எழுதினார்.
தி வே திங்ஸ் ஒர்க் என்ற நூலை 1988 ஆம் ஆண்டிலும் தி நியூ வே திங்ஸ் ஒர்க் என்ற நூலை 1998 ஆம் ஆண்டிலும் எழுதி வெளியிட்டார்.
Remove ads
பெற்ற விருதுகளும் மதிப்புகளும்
- மக்கார்தர் பெல்லோஸ் ப்ரொகிராம்
- கால்டிகாட் பதக்கம்
- ஆரன் புக் விருது
- கிறிசுடோபர் விருது
- அமெரிக்கன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஆர்க்கிடெக்ட்ஸ் பதக்கம்
- டாய்ச்சர் ஜூகென்லிட்டிரேச்சர்பிரிட்ஸ்
தேசிய கட்டட அருங்காட்சியகம் 2007 முதல் 2008 வரை டேவிட் மெக்காலே படைப்புகள் பற்றிய கண்காட்சியை நடத்தியது.[2] அதுபோல கியூரியர் மியூசியம் 2009இல் இவரது படைப்புகளைக் காட்சிப்படுத்தியது.[3]
மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads