டைன் ஆற்றங்கரை நியூகாசில்

From Wikipedia, the free encyclopedia

டைன் ஆற்றங்கரை நியூகாசில்
Remove ads

டைன் ஆற்றங்கரை நியூகாசில் (Newcastle upon Tyne, /njˈkɑːsəl/ (கேட்க), நியூகாசில் அப்பான் டைன், சுருக்கமாக நியூகாசில்) வடகிழக்கு இங்கிலாந்தின் டைனும் வியரும் கௌன்ட்டியில் அமைந்துள்ள நகரமும் பெருநகர் பரோவும் ஆகும். வரலாற்றின்படி1974ஆம் ஆண்டுவரை இது நார்தம்பர்லாந்து கௌன்ட்டியின் அங்கமாக இருந்தது. டைன் ஆற்றின் வடகரையில் வடகடலிலிருந்து 8.5 mi (13.7 km) தொலைவில் உள்ளது.[2] முன்பு உரோமைப் பேரரசின் குடியிருப்பாக இருந்த பொன்சு ஏலியசு என்றவிடத்திலேயே இந்நகரம் வளர்ந்துள்ளது.[3][4] இங்கு இங்கிலாந்தைக் கையகப்படுத்திய நோர்மாந்திய பிரபு வில்லியத்தின் (பின்னர் இங்கிலாந்தின் முதலாம் வில்லியம்) மகன் குர்தோசு இங்கு கட்டிய புதிய கோட்டையை ஒட்டி இந்நகரத்தின் பெயர் அமைந்தது. கம்பளி வணிகத்தில் முதன்மையான மையமாக விளங்கிய இந்நகரம் பின்னாளில் பெரும் சுரங்கத் தொழில் நகரமாக மாறியது. இங்குள்ள துறைமுகம் 16வது நூற்றாண்டில் கட்டப்பட்டது;அதனுடன் கப்பல் கட்டும் தொழிற்கூடங்களும் டைன் ஆற்றின் போக்கோடு கட்டமைக்கப்பட்டன. உலகின் பெரிய கப்பல் கட்டும் மற்றும் கப்பல் சரிபார்ப்புத் தொழில் மையமாக விளங்கியது. தற்போது இவற்றில் பல முடங்கி மூடப்பட்டு விட்டன. இன்றைய காலத்திற்கேற்ப நிறுவன தலைமையகங்கள், கல்வி மற்றும் எண்ணிம தொழினுட்ப மையம், சில்லறை வணிகம், சுற்றுலா மற்றும் பண்பாட்டு மையங்கள் என புதிய சேவைத்துறை தொழில்கள் தழைக்கின்றன.

விரைவான உண்மைகள் டைன் ஆற்றங்கரை நியூகாசில் நகரம் நியூகாசில், நாடு ...

நியூகாசில் பிரவுன் ஏல் எனப்படும் மதுவகையும் டைன் பாலமும் இந்நகரை அடையாளப்படுத்துகின்றன. இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் நியூகாசில் யுனைடெட் காற்பந்துக் கழகமும் இந்நகரை அடையாளப்படுத்துகிறது. உலகின் மிகவும் புகழ்பெற்ற அரை மராத்தன், கிரேட் நார்த் இரன் 1981இல் தொடங்கப்பட்டதிலிருந்து இங்குதான் நடத்தப்படுகிறது.[5]

இப்பகுதி மக்கள் ஜியோர்டி என்ற விளிப்பெயரால் அறியப்படுகின்றனர்.

Remove ads

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads