டை-டெர்ட்-பியூட்டைல் பெராக்சைடு
வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
டை-டெர்ட்-பியூட்டைல் பெராக்சைடு (Di-tert-butyl peroxide) என்பது C8H18O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இரு-மூவிணைய-பியூட்டைல் பெராக்சைடு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். இச்சேர்மத்தில் பெராக்சைடு தொகுதி இரண்டு மூவிணைய பியூட்டைல் தொகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. நிறமற்ற நீர்மமாகக் காணப்படும் இச்சேர்மம் அதிக நிலைப்புத்தன்மை கொண்ட கரிமப் பெராக்சைடுகளில் ஒன்றாகும்.
Remove ads
வினைகள்
100 °செல்சியசு வெப்பநிலைக்கு மேர்பட்ட வெப்பநிலையில் பெராக்சைடு பிணைப்புகள் சமப்பிளவு வினைக்கு உட்படுகின்றன. இக்காரணத்தினால்தான் கரிமத் தொகுப்பு வினைகளில் பலபடியாக்கல் வினையையும் தனி உறுப்பு உற்பத்தியையும் முன்னெடுக்கும் தொடக்கப் பொருளாக இதைப் பயன்படுத்துகிறார்கள். மெத்தில் தனி உறுப்புகள் உருவாக்கத்தின் வழியாக சிதைவு வினை நிகழ்கிறது.
- (CH3)3COOC(CH3)3 → 2 (CH3)3CO.
- (CH3)3CO. → (CH3)2CO + CH3.
- 2 CH3. → CH3-CH3
இயந்திரங்களில் எங்கெல்லாம் ஆக்சிசன் கட்டுப்படுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் டை-டெர்ட்-பியூட்டைல் பெராக்சைடின் கொள்கை பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இம்மூலக்கூறு எரிபொருளையும் ஆக்சிசனேற்றியையும் வழங்குகிறது [1].
Remove ads
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads