தக்கிலமாக்கான் பாலைவனம்

From Wikipedia, the free encyclopedia

தக்கிலமாக்கான் பாலைவனம்
Remove ads

தக்கிலமாக்கான் பாலைவனம் (Taklamakan Desert) என்பது வடமேற்குச் சீனாவின் சிஞ்சியாங் உய்கூர் தன்னாட்சிப்பிரதேசத்தில் உள்ள ஓர் பாலைவனமாகும். தெற்கே குன்லுன் மலைகள், மேற்கு மற்றும் வடக்கில் பாமீர் மலைகள், தியேன் சன், இமியோன் மலை, கிழக்கே கோபி பாலைவனம் ஆகியவற்றுக்கிடையே இப்பாலைவனம் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் தக்கிலமாக்கான் பாலைவனம், சீனப் பெயர் ...
Remove ads

பெயர்க்காரணம்

உய்கர் மொழியில் 'தனித்துவிடப்பட்ட இடம்' என்ற பொருள்தரும் அரேபியச் சொல்லிலிருது இப்பெயர் பெற்றது.[1][2] துருக்கிய மொழியில் இடிபாடுகளான இடம் என்ற பொருள்தரும் மற்றொரு நம்பத்தகுந்த பெயர் விளக்கமும் இங்கு கூறப்படுகிறது.[3][4]

புவியியல்

Thumb
தக்கிலமாக்கன் பாலைவனம் மற்றும் தாரிம் வடிநிலம்
Thumb
கிபி 3-ஆம் நூற்றாண்டில் தக்கிலமாக்கான் பாலைவனத்தைச் சுற்றிய இராச்சியங்கள்
Thumb
நாசாவின் தக்கிலமக்கான் பாலைவனப் புகைப்படம்

தக்கிலமாக்கான் பாலைவனம் சீனாவின் முதலாவது மிகப்பெரிய பாலைவனமும், உலகின் இரண்டாவது பெரிய நகரும் பாலைவனமும் ஆகும். இதன் பரப்பளவு 3,37,000 சகிமீ ஆகும்.[5] மேலும் 1,000 கிலோமீட்டர்கள் (620 mi)நீளமும் 400 கிலோமீட்டர்கள் (250 mi) அகலமும் கொண்ட தாரிம் வடிநிலம் இதில் உள்ளதாகும். மேலும் தாரிம் வடிநிலத்தின் வடக்கு மற்றும் தெற்கு முனைகள் பட்டுப்பாதையை இரண்டாகப் பிரிக்கின்றன. எனவே பயணம் செய்வோர் வறண்ட நிலத்தைத் தவிர்த்துச் செல்ல எளிதாகிறது.[6] இது உலகின் இரண்டாவது நகரும் பாலைவனமாகும். இதன் 85% நகரும் மணற்குன்றுகளால் ஆனது.[7] உலகின் ப்ரப்பளவில் பெரிய பாலைவனங்களில் இது 18 ஆவது இடத்தில் உள்ளது.[8] சில புவியியல் ஆர்வலர்களும் சூழலியலாளர்களும் கோபி பாலைவனத்தின் கிழக்கிருந்து பிரிந்த பகுதியே தக்லகாமன் பாலைவனம் எனக் கருதுகின்றனர். சீன மக்கள் குடியரசு தாரிம் பாலைவன நெடுஞ்சாலையை இப்பகுதியில் அமைத்துள்ளது. இது தென் முனையான ஆதன் மற்றும் வடமுனையான லுன்டாய் ஆகியவற்றுக்கிடையேயுள்ள நகரங்களை இணைக்கும் சாலையாக உள்ளது. கடந்த ஆண்டுகளில் இப்பாலைவனமானது சில இடங்களில் மேலும் விரிவடைந்துள்ளது. இதனால் அங்குள்ள பண்ணைகள் மற்றும் கிரமங்களில் பாலைவனமாக்கல் நடைபெறுகின்றது.

Remove ads

கால நிலை

Thumb
யார்க்கண்ட்பகுதியில் பாலைவன வாழ்க்கை

இமயமலையின் மழைமறைவுப் பிரதேசத்தில் அமைந்துள்ள்தால் தக்கிலமாக்கான் பாலைவனத்தில் எப்பொழுதும் நிலையான குளிர் பாலைவனக் காலநிலை நிலவுகிறது. இங்கு நிலவும் காலைநிலை சைபீரியாவில் உறைபணி கால நிலையுடன் தொடர்புடையது. இங்கு சில நேரங்களில் -20 பாகைகளுக்கும் கீழ் வெப்பநிலை பதிவாகியுள்ளது 2008 இல் சீனாவின் குளிர்ப் புயலின் போது, தக்கிலமாக்கான் பலைவனத்தில்4 சென்டிமீட்டர்கள் (1.6 அங்) பனிபடர்ந்து காணப்பட்டதாகவும் வெப்பநிலை −26.1 °C (−15 °F) இருந்ததாகவும் பதிவுகள் கூறுகின்றன.[9] நிலப்பகுதியிலிருந்து மிகவும் உள்ளமைந்ததாக இருப்பதாலும், ஆசியாவில் மையப்பகுதியில் அமைந்திருப்பதாலும், திறந்த நீர்நிலைகளிலிருந்து பல்லாயிரம் கி, மீட்டர்கள் தொலைவில் அமைந்திருப்பதாலும் கோடைக்காலங்களில் இரவுநேரங்களில் கூட குளிர்தன்மையுடன் காணப்படுகிறது.

பாலைவனச் சோலை

Thumb
The Molcha (Moleqie) River forms a vast alluvial fan at the southern border of the Taklamakan Desert, as it leaves the Altyn-Tagh mountains and enters the desert in the western part of the Qiemo County. The left side appears blue from water flowing in many streams. The picture is taken in May, when the river is full with the snow/glacier meltwater.[10]

கடப்பதற்கு மிகவும் கடினமான தக்கிலமாக்கான் பாலைவனப்பகுதியில் மிகக் குறைந்த அளவே நீர் நிலைகள் காணப்படுகின்றன. அங்கு சில நகரங்களும் உள்ளன. பட்டுப்பாதையில் பயணம் செய்யும் வனிகர்கள் தங்கள் வண்டிகளை இங்கு நிறுத்தி தங்கி இளைப்பாரவும் மீண்டும் பயணத்தைத் தொடரவும் இவை உதவுகின்றன.[11]

இச்சோலை நகரங்கள் பல பண்டைய நாகரிங்களுடன் மிகவும் தொடர்புடையனவாக உள்ளன. வடமேற்கிலுள்ள அமு தாரியா வடிநிலம், ஆப்கானிஸ்தான் மலைக் கணவாய், இந்தியா, ஈரான், சீனா ஆகிவற்றுடன் தொடர்பை ஏற்படுத்துகின்றன. மேலும் வடக்கின் மிகப்பழமையான நகரமான அல்மாட்டி ஆகிய பல நகரங்களுடன் இவை இணைப்புப்பாலமாக உள்ளன. இவ்வூர்களின் நீர்பெறும் மூலங்களாக மலைகளே உள்ளன. அங்கு பொழியும் மழையால் இந்நகரங்கள் நீர்பெறுகின்றன. தெற்கில் கஷ்கர், மாரின் (சீனா), நியா (தாரிம் வடிநிலம்), யார்கண்ட், காட்டன், குவுகா, துருபன் ஆகியன வடக்கிலும், லௌலான், துன்ஹுவாங் ஆகியன கிழக்கிலும் அமைந்துள்ளன.[6] தற்போது ஆங்காங்கு வாழ்ந்த மக்கள் குடியிருப்புகள் (மாரின், கோவோச்சங் போன்றவை) அழிந்து அவர்கள் சிஞ்சியாங்க் தன்னாட்சிப் பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளனர்.[12]

இங்கு நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகளில் தக்கிலமாக்கான் பாலைவனச் சோலை மணற் புதையல்களில் டோக்கரியன்கள், கி.மு. 4 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த முற்கால ஹெல்லெனிஸ்டுகள் [13] இந்தியர்கள், பௌத்தர்கள் ஆகியோரின் தாக்கங்கள் சான்றுகளாகக் காணப்படுகின்றன. இப்பொக்கிசங்களையும் அதன் விளைவுகளையும் பற்றி அவுரல் ஸ்டீன், ஸ்வேன் ஹெடின், ஆலபர்ட் வோன் லெ காக், பால் பெல்லியட் ஆகியோர் விவரித்துள்ளனர்.[14] மேலும் இப்பகுதியில் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய பதப்படுத்த உடல் (தாரிம் மம்மி) கண்டெடுக்கப்பட்டுள்ளது.[15]

பிற்காலத்தில் தக்கிலமாக்கான் பாலைவனத்தில் துருக்கிய மக்கள் குடியேறினர், டாங் வமிசத்தின், தொடக்கத்தில் சீன மக்கள் மத்திய ஆசியாவில் பல பகுதிகளிலும் தனது வணிகத்தை விரிவுபடுத்தும் நோக்குடன் முக்கியமாகப் பட்டுப்பாதையை கைப்பற்றும் நோக்குடன் இப்பகுதிகளை படிப்படிப்படியாக முழுவதும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். சீனா, துருக்கி, மங்கோலியா, திபெத்து ஆகியோரும் சில காலம் இப்பகுதியினை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளனர். இப்பொழுது இங்கு துருக்கிய உய்குர் மக்கள் அதிகமாகக் காணப்படுகின்றனர்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads