தக்கை இராமாயணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தக்கை இராமாயணம் என்பது, கம்பராமாயணத்தைப் பின்பற்றி எம்பெருமான் கவிராயர் என்பவர் இயற்றிய ஒரு நூலாகும். எம்பெருமான் கவிராயர் கொங்கு நாட்டின் வரலாற்றுச் சூழலோடு இக் காப்பியத்தைப் பாடியுள்ளார். தமிழுக்குத் தொண்டு செய்துள்ள கொங்குபகுதியின் சிறப்பு இதில் விவரிக்கப்பட்டுள்ளது. இக் காப்பியம் ஏறக்குறைய 1600 இல் பாடப்பட்டதாகும்.
இராமனின் கதை பாரதக் கண்டம் முழுமையும் பல்வேறு மொழிகளில் பல்வேறு இலக்கிய வடிவங்களில் பல்வேறு புலவர்களால் பாடப்பட்டுள்ளது. காப்பிய வடிவில், கதைப்பாடல் வடிவில், நாட்டுப்புற வடிவில், வில்லுப்பாட்டு வடிவில், நவீன இலக்கிய வடிவில் எனப் பாடப்பட்டுள்ளது. தக்கை இராமாயணமும் இவ்வாறாக இராமனின் கதை கூற எழுந்த ஒரு நூலாகும். கம்பராமாயணம் போல் விரிவாகப் பாடாமல் ஆனால் எல்லாப் பாடல்களையும் சுருங்கிய வடிவில் பாடியுள்ளார். இருப்பினும் எம்பெருமான் கவிராயர் தனது கற்பனையழகையும் கவி வளத்தையும் சுருக்கிக்கொள்ளவில்லை.
Remove ads
தோற்றமும் அமைப்பும்
சங்ககிரி வள்ளல் திருமிகு நல்லதம்பிக் காங்கேயன் எம்பெருமான் கவிராயரை வேண்ட தக்கை இராமாயணம் காப்பியம் உருவானது. தக்கை எனும் இசைக் கருவியைக் கொண்டு பாடப்பட்டதால் இது தக்கை இராமாயணம் என்றழைக்கப்பட்டது. கதாகாலட்சேப முறையில் இது பாடப்பட்டதாகும். இது ஏட்டுச் சுவடியிலும் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றிக் கொங்கு மண்டல சதகம் படல் ஒன்று குறிப்பிடுகிறது. [1] [2]
பதிப்பு
இக் காப்பியம் முழுமையும் பதிப்பிக்கப் பெறவில்லை. இவற்றின் தொகுதி ஒன்று, தொகுதி இரண்டு எனப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. யுத்த காண்டம் கையெழுத்துப் பிரதியாக உள்ளது. தக்கை இராமாயணப் பதிப்பு வரலாற்றில் தி. அ. முத்துச்சாமிக் கோனார், வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர். கு. அருணாச்சலக் கவுண்டர் ஆகியோரின் முயற்சிகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. யுத்தக் காண்டத்தின் பகுதி கணிப்பொறித் தட்டச்சு நிலையில் கோபி கலை அறிவியல் கல்லூரியில் அச்சுக்குத் தயாரான நிலையில் உள்ளது. தக்கை இராமாயணம் நாட்டார் கூறுகளின் வழியாக நாட்டார் காப்பியமாகவே பாடப்பட்டுள்ளதை அறியலாம். இது தொடர்பான பல செய்திகளை கோபி கலை அறிவியல் கலைக்கல்லுரரி பேராசிரியர் முனைவர் மகுடேஸ்வரன் அறியத்தந்துள்ளார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளிப்பார்வை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads