தங்கம்(III) ஐதராக்சைடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தங்கம்(III) ஐதராக்சைடு (Gold(III) hydroxide) என்பது Au(OH)3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தங்கம் ஐதராக்சைடு, தங்கம் மூவைதராக்சைடு, தங்கம் டிரையைதராக்சைடு என்ற பெயர்களாலும் இது அழிக்கப்படுகிறது. தங்கத்தின் ஐதராக்சைடான இச்சேர்மம் ஆரிக் அமிலமாகவும் (H3AuO3) பார்க்கப்படுகிறது. 140 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேலான வெப்பநிலையில் தங்கம்(III) ஐதராக்சைடு நீர்நீக்கமடைந்து தங்கம்(III) ஆக்சைடு உருவாகிறது. ஆரிக் அமிலத்தின் மூலம் தயாரிக்கப்படும் உப்புகள் ஆரேட்டுகள் எனப்படுகின்றன.
ஈரப்பதம் மற்றும் நேர்மறை மின் ஆற்றலுக்கு உட்பட்ட தங்க உலோகமயமாக்கலின் மின்வேதியியல் அரிப்பில் தங்கம் ஐதராக்சைடு உருவாகும். நுண் மின்னணுவியல் அரிப்பு தோல்வி முறைகளில் இதுவும் ஒன்றாகும். தங்க உலோகமயமாக்கலில் இருந்து மிகப்பெரிய அளவில் ஐதராக்சைடு தயாரிக்கப்படுகிறது. அடுக்கு தடிமனாக வளர்ந்த பிறகு இது சிதறக்கூடும். மேலும் கடத்தும் துகள்கள் குறுகிய சுற்றுகள் அல்லது கசிவு பாதைகளை ஏற்படுத்தலாம். தங்க அடுக்கின் தடிமன் குறைவதால் அதன் மின் எதிர்ப்பின் அதிகரிப்புக்கும் வழிவகுக்கும். இது மின் தோல்விக்கும் வழிவகுக்கும்.[7]
Remove ads
தயாரிப்பு
குளோரோ ஆரிக் அமிலம் சோடியம் ஐதராக்சைடு போன்ற காரங்களுடன் வினைபுரிந்து தங்கம்(III) ஐதராக்சைடு உருவாகிறது:[8]
- HAuCl4 + 4NaOH → Au(OH)3 + 4NaCl + H2O
வினைகள்
தங்கம்(III) ஐதராக்சைடு அம்மோனியாவுடன் வினைபுரிந்து வெடிக்கும் கலவையான தங்கத்தை உருவாக்குகிறது.[9] தங்கம்(III) ஐதராக்சைடு காரத்துடன் வினைபுரிந்து (AuO2−) ஆரேட்டுகளை உருவாக்குகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads