தங்க முக்கோணம், தென்கிழக்காசியா

From Wikipedia, the free encyclopedia

தங்க முக்கோணம், தென்கிழக்காசியாmap
Remove ads

தங்க முக்கோணம் (Golden Triangle, Southeast Asia) என்பது உலகில் அதிக அளவில் அபினி உற்பத்தி செய்யப்படும் தென்கிழக்காசியாவின் பிரதேசங்களைக் குறிக்கிறது. தென்கிழக்காசியாவின் தாய்லாந்து, லாவோஸ் மற்றும் மியான்மரின் எல்லைப் பகுதிகளை இணைக்கும் மலைப்பாங்கான பகுதிகளில் அபினிச் செடிகள் விளைவிக்கப்படும் பிரதேசங்களைக் குறிக்கிறது. . [1]

Thumb
உலக வரைபடத்தில் அதிக அளவில் அபினி உற்பத்தி செய்யப்படும் பிரதேசங்கள்

ஐக்கிய அமெரிக்காவின் உளவு நிறுவனமான நடுவண் ஒற்று முகமையால், இப்பிரதேசங்களுக்கு தங்க முக்கோணம் எனும் பெயரிடப்பட்டது.[2]

தென்கிழக்காசியாவின் இத்தங்க முக்கோணப் பிரதேசம் தாய்லாந்தின் வடக்கு, மியான்மரின் கிழக்கு மற்றும் லாவோசின் மேற்குப் பகுதிகளை இணைக்கும் மலைத்தொடர்களில் 36,000 சகிமீ பரப்பளவு கொண்டது.

தங்கப் பிறை என அழைக்கப்படும் அபினி உற்பத்தியாகும் பிரதேசங்களில் ஒன்றான ஆப்கானிஸ்தானில், உலகில் அதிக அளவில் அபினி உற்பத்திச் செய்யப்படுகிறது.[3]

Remove ads

உற்பத்தி

உலகின் அபின் உற்பத்தியில் ஆப்கானித்தானித்தானிற்கு அடுத்து, தென்கிழக்காசியாவின் மியான்மர் இரண்டாம் இடம் வகிக்கிறது.[3] மியான்மர் நாடு, இரண்டாம் உலகப் போருக்குப் பின், அபினை மருத்துவப் பயன்பாட்டு உற்பத்தியில் தென்கிழக்காசியாவில் முதலிடம் வகித்தது.[4] ஐக்கிய நாடுகள் அவையின் மருந்துக் கட்டுப்பாடு அமைப்பின் கணக்கீடின் படி, 2005ல் மியான்மரில் 167 சதுர மைல் பரப்பில் அபினி பயிரிடப்பட்டதாக கூறுகிறது.[5]

மியான்மர், தாய்லாந்து மற்றும் லாவோஸ் ஆகிய இந்த மூன்று நாடுகளின் எல்லைப்புற பகுதிகளில் அமைந்த மலைப்பாங்கான பகுதிகளில் அபினி பயிரிடப்படுவதை தொடர்புடைய அரசுகளால் கண்காணிக்க இயலாதவாறு, உள்ளூர் தாய்லாந்து மலைவாழ் பழங்குடி மக்கள் மூலம் போதை மருந்து கடத்துபவர்கள் போதை தரும் அபினி செடியை பயிரிடுகின்றனர்.[6]

1996 முதல் 2006 வரை மியான்மரின் இராணுவ அரசு அபினி பயிரிடப்படுவதை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதால், தங்க முக்கோணப் பகுதியில், அபின் செடிகள் பயிரிடுவது 80% குறைந்துள்ளது.

Thumb
விதைகளுடன் கூடிய உலர்ந்த அபினி பூக்கள்
Thumb
உலர்ந்த அபினி விதைகளுடன் கூடிய பூத்தண்டுகள் (தட்டில்), மற்றும் விதைகள் (கிண்ணத்தில்).
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads