தசைச்சோர்வு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நீண்ட நேரம் வலுவான நிலையில் தசைகள் சுருக்கத்தில் இருந்தால் தசைச் சோர்வு(Muscle fatigue) ஏற்படுகிறது. இது தசைகளில் உள்ள கிளைக்கோஜன் குறைவதனாலும் லாக்டிக் அமிலம் அதிகரிப்பதாலும் ஏற்படுகிறது. தசைச்சோர்வு என்பது தசைகள் மேற்கொண்டு சுருங்க இயலாமல் போவது மற்றும் தசை நார்களில் வளர்சிதை மாற்றச் செயல் நடைபெற இயலாது போவதாகும். தொடர்ந்த தசை இயக்க குறைவுபடுதலுக்கு நரம்புத்தசை சந்திப்பு வழியே பெறப்படும் தூண்டுதல்களின் தன்மையே காரணம் என ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. தசைகளுக்கு இரத்த ஓட்டம் தடைப்படுவதனால், ஒரு வினாடிக்குள் தசைகள் சோர்வடைந்து விடும் என்பது நன்கு தெரிந்த உண்மை. தசைகளுக்கு O2 மற்றும் உணவுப் பொருட்கள் செல்லாததே இதற்குக் காரணமாகும்.[1][2][3]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads