தடோபா அந்தாரி தேசியப் பூங்கா
tiger reserve From Wikipedia, the free encyclopedia
Remove ads
தடோபா அந்தாரி தேசியப் பூங்கா (Tadoba Andhari Tiger Reserve) இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது மஹாராஸ்டிராவின் பழமையான மற்றும் பெரிய தேசியப் பூங்காவாகும். இந்தத் தேசியப் பூங்காவில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.[1] தடோபா என்பது இங்குள்ள அடர்ந்த வனங்களில் வாழும் பழங்குடியினர் வணங்கும் கடவுளின் பெயராகும். மேலும் அந்தாரி என்பது இந்தத் தேசியப் பூங்காவில் ஓடும் ஆற்றின் பெயர் ஆகும்.[2]
Remove ads
வரலாறு
1935 ஆம் ஆண்டு இந்தக் காட்டுப் பகுதியில் வேட்டையாடுதல் தடை செய்யப்பட்டது. பின்னர் 20 ஆண்டுகள் கழித்து 1955 ஆம் ஆண்டு 116.54 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவுள்ள பகுதி தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. அருகிலுள்ள காட்டுப் பகுதிகளில் அந்தாரி வனவிலங்குகள் காப்பகம் 1986 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பின்னர் 1995 ஆம் ஆண்டு இவை அனைத்தையும் ஒன்றிணைத்து இப்பூங்காவில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்பட்டது.
Remove ads
புகைப்படம்
- தடோபா தேசியப் பூங்காவிலுள்ள புலிகளுள் ஒன்று
வெளி இணைப்புகள்
- Tiger conservation: Maharashtra villagers get first instalment of rehab package, The Hindu, 29-2-2012
- A Virtual Visit to Tadoba, 2:32, by Kiran G
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads