தந்தம்

From Wikipedia, the free encyclopedia

தந்தம்
Remove ads

தந்தம் (Ivory) என்பது தந்தப் பல்லில் இருந்து பெறப்படும் கடினமான, வெண் பொருளாகும். யானையின் பல்லே தந்தம் எனப்பட்டாலும், பிற மிருகங்களின் தந்தப் பல்லும் கலை மற்றும் பிற உருவாக்கத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இது பிரதானமான பற்காழினைக் கொண்டு (Ca10(PO4)6(CO3)·H2O)), பல்லினதும் தந்தப் பல்லினதும் பௌதீக அமைப்பைக் கொண்டு காணப்படும். யானையின் தந்தத்தைவிட பிற மிருகங்களின் வணிகத்தில் புழக்கத்தில் உள்ளது.[1] இது பண்டைய காலம் முதல் பெறுமதியைக் கொண்டுள்ளது.[2] யானைத் தந்தம் மிக முக்கிய மூலமாகவிருந்தாலும், மாமூத், தந்தப்பல் கடற்குதிரை, நீர்யானை, பெருந்தலைத் திமிங்கலம், ஓர்க்கா திமிங்கலம், கொம்புத் திமிங்கலம், கரணைப் பன்றி போன்றவற்றிலும் தந்தம் உள்ளது.[3][4] காட்டுமான் இரு தந்தமுள்ள பற்களைக் கொண்டுள்ளது. இவை அவற்றின் சந்ததியிலிருந்து எச்சியவை என நம்பப்படுகிறது.[5]

Thumb
இலூவா அருங்காட்சியகத்தில் உள்ள கி.மு 1300 காலப்பகுதியில் தந்தத்தினால் செய்யபப்ட்ட நிர்வாணப் பெண்

தமிழில் தந்தத்தைக் குறிக்கும் மற்ற பெயர்கள் கோடு[6], எயிறு, மருப்பு என்பனவாகும்.

Remove ads

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads