தந்திதுர்கன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தந்திவர்மன் அல்லது இரண்டாம் தந்தி துர்கன் (ஆட்சிக்காலம் 735-756 ) என்பவன் இராஷ்டிரகூடப் பேரரசை மான்யகட்டா என்ற இடத்தில் நிறுவியவன்.[1] இவனது தலைநகரமாக கர்நாடகத்தின் குல்பர்கா பகுதியில் இருந்தது. இவனுக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற இவனது மாமாவான முதலாம் கிருட்டிணன் தனது பேரரசின் எல்லையைக் கர்நாடகம் முழுமைக்கும் விரிவாக்கினான்.

தந்தி துர்கன் சாளுக்கியர்களை 753இல் தோற்கடித்து அவர்களின் பட்டங்களான இராஜாதிராஜ மற்றும் பரமேஷ்வரா ஆகியவற்றைத் தனதாக்கிக் கொண்டான். குஜராத் பாவங்கங்க கல்வெட்டில் அவன் பாதாமி சாளுக்கியர்களைத் தோற்கடித்தான் என்று கூறுகிறது. மேலும் இவன் லதா (குஜராத்), மால்வா , டங்கா, கலிங்கம் சேஷர்கள் (நாகர்கள்) ஆகியோரைப் போரில் தோற்கடித்தான்[2]

பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் சாளுக்கியர்களிடமிருந்து காஞ்சியை மீட்க இவன் உதவியாக இருந்தான் தன் தன் மகளை நந்திவர்மனுக்கு மணம் செய்வித்து உறவைப் பலமாக்கிக்கொண்டான்.[3]


Remove ads

குறிப்புகள்

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads