தனமஞ்சரி பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தனமஞ்சரி பல்கலைக்கழகம் (Dhanamanjuri University) என்பது இந்தியாவின் மணிப்பூர், இம்பாலில் அமைந்துள்ளமாநிலப் பல்கலைக்கழகம் ஆகும்.[1][2]

விரைவான உண்மைகள் Other name, உருவாக்கம் ...

வரலாறு

தனமஞ்சரி பல்கலைக்கழகம், 6 ஏப்ரல் 2018 அன்று நடைமுறைக்கு வந்த மணிப்பூர் மாநில தனமஞ்சூரி பல்கலைக்கழக சட்டம், 2017 மூலம் நிறுவப்பட்டது.

மஹாராஜ் சுராசந்த் சிங்கின் மனைவியான மகாராணி தனமஞ்சுரி தேவியின் நினைவாக இந்தப் பல்கலைக்கழகம் பெயரிடப்பட்டது.

பல்கலைக்கழகமானது ராஷ்ட்ரீய உச்சதர் ஷிக்ஷா அபியான் (ரூசா) தேசிய திட்டத்தின் கீழ் முதன்மையான கூறுகளில் ஒன்றின் அடிப்படையில் நிறுவப்பட்டது. அதாவது தொகுப்புக் கல்லூரிகளைப் பல்கலைக்கழகங்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது. மகாராணி தனமஞ்சூரி தனமஞ்சூரி கல்லூரியை உயர்கல்வியின் வளர்ச்சிக்கு அளித்து ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், இப்பல்கலைக்கழகத்திற்கு மகாராணி தனமஞ்சரி பல்கலைக்கழகம் எனப் பெயரிடப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தின்கீழ் த. ம. அறிவியல் கல்லூரி, த. ம. கலைக் கல்லூரி, த. ம. வணிகவியல் கல்லூரி மற்றும் ஞானப்ரியா மகளிர் கல்லூரி மற்றும் எல். எம். எஸ். சட்டக் கல்லூரி ஆகிய கல்லூரிகள் இந்தப் பல்கலைக்கழகத்தினால் தொடங்கப்பட்டது.

தனமஞ்சரி பல்கலைக்கழகம் தற்போது இம்பால் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள த. ம. கல்லூரி வளாகத்திலிருந்து செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த வளாகம் கிழக்கில் தேசிய நெடுஞ்சாலை எண்.2, மேற்கு மற்றும் வடக்கில் தாங்ம்மெய்பண்ட் சாலை மற்றும் தெற்கில் நாகா ஆறு ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. காங்லாவின் தென்மேற்கில் ஞானப்ரியா மகளிர் கல்லூரி அமைந்துள்ளது. இது மணிப்பூரின் பழைய அரண்மனையான ராஜ் பவனுக்கு அருகில் உள்ளது. எல். எம். எஸ். சட்டக் கல்லூரி த. ம. வளாகத்திற்குச் சற்று முன்னால் தேசிய நெடுஞ்சாலை எண்.2ல் அமைந்துள்ளது.

Remove ads

பல்கலைக்கழக கல்லூரிகள்

  1. த. ம. கலைக் கல்லூரி, இம்பால்
  2. த. ம. வணிகவியல் கல்லூரி, இம்பால்
  3. த. ம. கல்லூரி, இம்பால்
  4. ஞானப்ரியா கல்லூரி, இம்பால்
  5. எல். எம். எஸ். சட்டக் கல்லூரி, இம்பால்

நிர்வாக அமைப்பு

துணைவேந்தர் என். இராஜ்முகான் சிங்
பதிவாளர் நிவேதிதா லைரென்லக்பம்
நிதி அதிகாரி கொன்சம் பிங்கு

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads