தனியார் பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தனியார் பல்கலைக்கழகங்கள் (மற்றும் தனியார் கல்லூரிகள்) என்பது தனியார் நிறுவனம் அல்லது ஒரு தனி நபரால் இயங்கப்டும் பல்கலைக்கழகம் ஆகும். இது பொதுவாக அரசாங்கங்களால் இயக்கப்படுவதில்லை, இருப்பினும் பொது மாணவர் கடன்கள் மற்றும் பல உதவிகள் அரசாங்கத்தினால் பெறப்படுகின்றது. ஒரு தனியார் பல்கலைக்கழகம் அவற்றின் இருப்பிடத்தைப் பொறுத்து அரசாங்க கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைக்கு உட்பட்டிருக்கலாம். இது பொதுத்துறை பல்கலைக்கழகம் மற்றும் தேசியப் பல்கலைக்கழகத்துடன் வேறுபடுகின்றது. பல தனியார் பலகலைக்கழகங்கள் இலாப நோக்கற்ற அமைப்புப்புடன் இயக்குகின்றது.

Remove ads
இந்தியா
இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழக மானியக் குழு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, இது 1956[1] ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானிய ஆணையச் சட்டத்திலிருந்து உருவாக்கப்பட்டது. 2003[2] ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழக மானியக் குழு (தனியார் பல்கலைக்கழகங்களில் தரநிலைகளை நிறுவுதல் மற்றும் பராமரித்தல்) விதிமுறைகளின் கீழ் கட்டுப்படுத்தப்படுகின்றன. பல்கலைக்கழக மானியக் குழுவால் 23 ஆகத்து 2022ஆம் ஆண்டு நிலவரப்படி 421 பல்கலைக்கழகங்கள் இயங்குவதாக பட்டியலிடப்பட்டது.[3]
Remove ads
இலங்கை
இலங்கை நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை, ஆனால் தனியார் நிறுவங்களால் இயங்கும் பல்கலைக்கழகங்களை வெளிப்படையாக தடைசெய்யவில்லை. அவ்வாறு இயங்கும் பல தனியார் கல்லூரிகள் உள்ளன (இந்த நிறுவனங்கள் நிறுவனச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன).
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads