தனியெத்சுக் மக்கள் குடியரசு

From Wikipedia, the free encyclopedia

தனியெத்சுக் மக்கள் குடியரசு
Remove ads

தனியெத்சுக் மக்கள் குடியரசு (Donetsk People's Republic; உருசியம்: Донецкая Народная Республика, ஒ.பெ தனியெத்சுக்கயா நரோத்னயா ரிசுப்புப்ளிக்கா) என்பது 2014 ஏப்பிரல் 7 இல் உக்ரைனில் இருந்து சுய-அறிவிப்பு மூலம் பிரிந்த ஒரு மாநிலம் ஆகும். தனியெத்சுக் இதன் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் ஆகும். 2018 முதல் தெனிசு புசிலின் இதன் அரசுத்தலைவராக உள்ளார்.[6][7]

விரைவான உண்மைகள் தனியெத்சுக் மக்கள் குடியரசுDonetsk People's Republic, நிலை ...

உக்ரைன் தனியெத்சுக் மக்கள் குடியரசையும், லுகான்சுக் மக்கள் குடியரசையும் பயங்கரவாத அமைப்புகளாகக் கருதுகிறது.[8] உருசிய இராணுவத் தலையீட்டின் விளைவாக "உக்ரைனின் தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களின்" பகுதியாக உக்ரைன் இவ்விரண்டு பகுதிகளையும் அத்துடன் கிரிமியா தன்னாட்சிக் குடியரசு, செவஸ்தபோல் ஆகியவற்றையும் கருதுகிறது.[9][10] தனியெத்சுக் மாகாணத்தின் மொத்த மக்கள்தொகையில் அரைவாசிப் பேர் (கிட்டத்தட்ட 2 மில்லியன்) தனியெத்சுக் மக்கள் குடியரசில் வாழ்கிறார்கள். கிளர்ச்சியாளர்கள் தனியெத்சுக் மாகாணத்தின் முழுப் பகுதியையும் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்காவிட்டாலும், 7,853 சதுர கிலோமீட்டர்கள் (3,032 sq mi) பகுதியைத் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இவற்றில் முக்கிய நகரங்களான தனியெத்சுக் (தலைநகர்), மக்கீவ்க்கா, ஒர்லீவ்க்கா ஆகியவற்றைக் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.[11]

2022 பெப்ரவரி 21 இல், உருசியா தனியெத்சுக், லுகான்சுக் குடியரசுகளை தனிநாடுகளாக அங்கீகரித்தது.[12][13] ஆனாலும், 2017 பிப்ரவரி முதல் தனியெசுக் குடியரசு வழங்கிவந்த அடையாள ஆவணங்கள், டிப்புளோமாக்கள், பிறப்பு, திருமணச் சான்றிதழ்கள், வாகனப் பதிவுத் தகடுகள் ஆகியவற்றை உருசியா ஏற்கனவே அங்கீகரித்திருந்தது.[14][15]

Remove ads

இவற்றையும் பார்க்க

குறிப்புகள்

    மேற்கோள்கள்

    வெளி இணைப்புகள்

    Loading related searches...

    Wikiwand - on

    Seamless Wikipedia browsing. On steroids.

    Remove ads