தமிழகத்தின் இரும்புக்காலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழகத்தின் இரும்புக்காலம் பொதுவாகவே அறிஞர்களால் பொ.மு. 500 என்றே நிறுவப்பட்டு வந்தது. ஆனால் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகள் விரைவு பெற்ற காலம் அதை இன்னும் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக நிறுவியது. இதற்கு முன்னரே செம்பு, இரும்பு, தங்கம் போன்ற உலோகங்கள் இங்கு உபயோகப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிய வந்தது.[1]

மின்னழுத்தத் தடுப்புக்கள ஆய்வு
சென்னையில் உள்ள தேசியக் கடலாய்வு நிறுவனத்தைச் சார்ந்த பத்ரி நாராயணன், சசிசேகரன், இராசவேலு[2] போன்றவர்கள் ஆதிச்சநல்லூர் பகுதியில் மின்னழுத்தத் தடுப்புக்கள ஆய்வுகளை (Electro-resistivity survey) மேற்கொண்டனர். அதன் மூலம் உலோகங்கள் இப்பகுதியில் எந்தளவு உபயோகப் படுத்தப்பட்டுள்ளது என்பதை அறியலாம். இம்மின்னழுத்த ஆய்வில் கிடைத்த இரும்பு பொருள்களை அறிஞர்கள் குறைந்தது பொ.மு. பத்தாம் நூற்றாண்டு[3] அளவில் உபயோகப் படுத்தப்பட்டவை என்றும் இவற்றின் பழமை பொ.மு. 17 ஆம் நூற்றாண்டு அளவு கூட செல்லும் என்றும் கணித்துள்ளனர்.[4] இதன் மூலம் தமிழகத்தின் இரும்புக்காலத்தை பொ.மு. 2000 அளவு மாற்றியமைக்க வேண்டியுள்ளது.[5][6]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
