தமிழகத்தில் கீழைப் பழங்கற்காலம்

From Wikipedia, the free encyclopedia

தமிழகத்தில் கீழைப் பழங்கற்காலம்
Remove ads

தமிழகத்தில் கீழைப் பழங்கற்காலம் கி.மு. 15,10,000 ஆண்டுகளுக்கு முன்னர் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்து[1] கி.மு. 50,000 வரை நிலைத்திருந்தது. குறிப்பாக சென்னை அத்திரம்பாக்கத்தில் கிடைத்த 15 லட்ச ஆண்டுகளுக்கு மேலும் பழமை வாய்ந்த தழும்பழி கல்லாயுதங்களைக் கொண்டு இதை நிறுவலாம். தழும்பழி ஆயுதங்கள் காலம் தழும்புரி என்ற செப்பனிடப்படாத ஆயுதங்களுக்கு பிந்தியவை ஆகும். அதனால் தமிழகத்தில் கிடைக்கும் தழும்பழி ஆயுதங்களுக்கே 15 லட்சம் ஆண்டுகள் பழமை இருப்பின்[2] அதற்கு சில லட்சம் ஆன்டுகளுக்கு முன்னரே தழும்புரி ஆயுதங்கள் உருவாக்கப்பட்டிருக்கும் என்பதால் தமிழகத்தின் கற்கால ஆரம்பத்தை 20 லட்சம் ஆன்டுகளுக்கு முன்னரும் கொண்டு செல்ல இயலும். ஆனால் இதற்கு மேலதிக ஆய்வுகள் செய்யப்பட வேண்டியுள்ளது.[2]

Thumb
15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டில் உபயோகிக்கப்பட்ட கல்லாயுதங்கள்
Remove ads

சென்னை தொழிற்சாலை

தொல்லியல் ஆய்வாளர்கள் தொல்லியல் களமான அத்திரம்பாக்கத்தையும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளையும் ஆங்கிலத்தில் மெட்ராசு இன்டசுட்ரி என்று கூறுவதுணடு. இப்பெயர் 1863ல் புருசு ஃபுட்டே என்னும் ஆய்வாளர் மேலுள்ள படிமத்தில் உள்ள ஆயுதங்களை கண்டறிந்த பின்னர் சில ஆண்டுகளுக்கு பின்னர் ஒசுவால்ட் எமன்கின் என்பவரால் சென்னைக்கு வழங்கப்பட்டது. அதன்படி தென்னிந்தியாவில் அதிப்பழமை வாய்ந்த கீழைப்பழங்கற்கால ஆயுதங்கள் கிடைக்கப்பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.[3]

Remove ads

ஆதாரங்கள்

சென்னையில் கிடைத்த கீழைப்பழங்கற்கால ஆயுதங்களுடன் மனித எழும்பின் கால்துண்டுகள் கிடைத்தது தமிழகத்திலும் கீழைப்பழங்கற்கால மனிதன் வாழ்ந்தான் என்பதுக்கு ஆதாரமாய் விளங்குகிறது.[4]

கற்களின் இயல்புகளும் வகைகளும்

அத்திரம்பாக்கத்தில் கிடைத்த கீழைப்பழங்கற்கால ஆயுதங்கள் அனைத்தும் குவாட் சயிட் என்ற கற்களால் ஆனவை. பெரிய குவாட் சயிட் பாறைகளில் நெருப்பை ஏற்றி சூடாக்கிய பின்னர் அதன் மேல் நீரை ஊற்றி பாறைகளை பிளந்து இவ்வாயுதங்களை செய்ததாகத் தெரிகிறது.

இக்கருவிகளை பிளந்து உருவாக்கும் போது அதை உடைக்க பயன்பட்ட குவாட்சயிட் கற்களின் தழும்பு இவ்வாயுதங்களில் காணப்படுகிறது. இதைக் கொண்டு இவர்கள் தங்கள் உடனடித் தேவைக்காக இதைப் போல் சரியாக செப்பனிடப்படாத ஆயுதங்களை பயன்படுத்தினர் எனக் கொள்ளலாம்.

செய்திறன் வளர்ச்சி

காலம் செல்லச் செல்ல இவர்கள் உபயோகிக்கும் ஆயுதங்களில் செப்பனிடும் முறைகள் அதிகம் கையாளப்பட்டு செய்திறனில் ஒரு படிமுறை வளர்ச்சியைக் கண்டுள்ளனர். இவ்வளர்ச்சி காலங்களின் போது இவர்களின் ஆயுதங்கள் கூழாங்கற்களிலும் முழுக்கற்களாலும் முழுக்கற்களில் இருந்து உடைக்கப்பட்ட ஆயுதங்களாகவும் வளர்ந்தது. இதன் வளர்ச்சியை தழும்புரியில் இருந்து தழும்பழி என்று கூறுவர்.

வடமதுரை

செங்கல்பட்டு அருகிலுள்ள வடமதுரையில் கிடைத்த பல வகையான கீழைப்பழங்கற்கால ஆயுதங்களைக் கொண்டு அங்கு படிப்படியாக ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சியை கண்டறிய இயலும்.[4] அவற்றை பின்வருமாறு வகைப்படுத்துகின்றனர்.

Thumb
தமிழகத்தில் கிடைத்த அடர்பழுப்பு கீழைப் பழங்கற்கால ஆயுதங்கள்

பழுப்புப் பிரிவு

இதில் முதல் வகை தழும்புரி என்னும் அதிகம் செப்பனிடப்படாத ஆயுதங்கள் அடர்பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. இரண்டாம் பிரிவு பழைய தழும்பழி ஆயுதங்களாகும். இது சற்று குன்றிய பழுப்பு நிறத்துடன் காணப்படுகிறது.

செம்பூரன் பிரிவு

இதில் முதல் வகை ஆயுதங்கள் சிறிது செம்பூரன் கலப்புடன் காணப்படும் மத்திய தழும்பழி கால ஆயுதங்களாகும். இரண்டாவது வகை அதிகச் செம்பூரன் கலப்புடன் காணப்படும் பிற்கால தழும்பழிக் கால ஆயுதங்களாகும்.

பளிங்குப் பிரிவு

இந்த வகை ஆயுதங்களும் குவாட்சயிட் கற்களால் செய்யப்பட்டாலும் இவற்றோடு கிடைத்த துணை ஆயுதங்கள் அனைத்தும் பளிங்குக் கற்களால் ஆனவை.[5] இவை வளர்ச்சியடைந்த தழும்பழிக் கால ஆயுதங்களாகும்.

Remove ads

குகைகள் மற்றும் பரவல்

தமிழக்த்தில் கீழைப்பழங்கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகைகள் பல கண்டறியப்ப்ட்டுளன. இந்த இடங்களை பார்க்கும் போது வடதமிழகத்திலேயே கீழைப்பழங்கற்கால மனிதர்களின் பரவல் அடர்ந்து காணப்படுகிறது. தென்பகுதிகள் காடு அடர்ந்த பகுதிகளாய் இருந்ததால் அது கீழைப்பழங்கற்கால மனிதர்களை ஈர்க்கவில்லை என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. அவற்றின் விவரம்,[3]

செங்கல்ப்பட்டு மாவட்டம்

  1. குடியம் - முதல் குழியில் பிந்திய தழும்பழிக் கால கோடாரிகள், வெட்டும் கருவிகள் ஆகியவையும் இரண்டாவது குழியில் கூழாங்கற்கருவிகள், கற்ற்கடுகள், செதுக்கல் கருவிகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன.
  2. கிருசுனாபுரம் - இதிலுள்ள கருவிகள் பிந்திய தழும்பழிக் கால கருவிகளாயினும் இவற்றினோடே கிடைத்த துணை ஆயுதங்கள் அனைத்தும் பளிங்கு கற்களால் ஆனது.
  3. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வடமதுரை
  4. திருப்பெரும்புதூர்
  5. எருமைவெட்டிப்பாளையம்
  6. மஞ்சனகரனை
  7. நம்பாக்கம்
  8. நெய்வேலி - தழும்பழி கோடாரிகள், வெட்டும் கருவிகள் மற்றும் கூர்க்கருவிகள்.
  9. பூண்டி - பிந்திய தழும்பழி கருவிகள்.
  10. பரந்தியூர்
  11. வடியூர்
  12. அரம்பாக்கம்
  13. ரங்கபுரம்
  14. அம்மம்பாக்கம்
  15. கொல்லாப்பாளையம்
  16. கம்மவாரிப்பாளையம்
  17. குஞ்யபுரம்
  18. நாராயணபுரம்
  19. ராசபாளையம்
  20. ஊத்துக்கோட்டை

வட ஆர்க்காடு மாவட்டம்

  1. அம்பரிசபுரம்
  2. அரும்பாக்கம்
  3. சென்னாசமுத்திரம்
  4. களத்தூர்
  5. கனியனூர்
  6. கீழ்வெண்பாக்கம்
  7. முசிறி
  8. நாகவேடு
  9. பகவெலி
  10. தக்கோலம்
  11. திருமால்பூர்
  12. வன்னியன் சத்திரம்

தர்மபுரி மாவட்டம்

  1. பர்கூர்
  2. வரதானப்பள்ளி

தஞ்சாவூர் மாவட்டம்

  1. தஞ்சாவூர்
  2. அத்திரம்பட்டினம்

மதுரை மாவட்டம்

  1. அவியூர்
  2. புதுப்பட்டி

முடிவுகள்

  1. கீழைப் பழங்கற்கால தமிழகத்தில் ஒரே இடத்தில் தொடர்ச்சியாக கீழை, மத்திய மற்றும் மேலைப் பழங்கற்கால ஆயுதங்கள் காணப்படினும் இந்த இடங்களில் மக்கள் தொடர்ந்து வாழ்ந்ததற்கான எச்சங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. அதன்பிறகு செய்யப்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகே இடைக்கற்காலத் தொடக்கத்திலேயே மனிதன் நிரந்தர குடியிருப்புகளை உருவாக்கி வாழ்ந்ததாக ஆய்வுகள் நிரூபித்தன. இது தமிழகத்தில் மட்டும் இன்றி உலகம் முழுதும் உள்ள நடைமுறையாகவே உள்ளது.[3]
  2. அத்திரம்பாக்கத்தில் கிடைத்த 15,10,000 ஆண்டுகள் பழமையான தழும்பழி ஆயுதங்கள் ஐரோப்பிய நாடுகளில் கிடைக்கும் ஆயுதங்களை விட பழமையாக காணப்படுவதால் கற்கால நாகரிகத்தில் தமிழகம் ஐரோப்பிய நாடுகளுக்கு முன்னோடியாய் இருந்தது நிரூபிக்கப்பட்டது.[6]
Remove ads

மூல நாகரிகம்

இந்த ஆயுதங்களுக்கான மூலம் ஆப்பிரிக்காவிலிருந்தே தென்னிந்தியா வந்திருக்க வேண்டும் என்பதில் ஆய்வாளர்களிடையே கருத்து ஒற்றுமை இருந்த போதும் அவர்கள் இந்தியாவிற்கு வடமேற்கிந்தியா மூலம் வந்திருக்கலாம் என்றும் பனிபடர்ச்சி காலத்தில் கடல்மட்டம் குறைவாக இருந்ததால் பாரசீகக் கடல் பகுதி மூலம் வந்திருக்கலாம் என்று இரு வேறு கருத்துகள் உள்ளன. இவை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க பட வேண்டும் என்றால் கீழைப்பழங்கற்கால மனிதர்களின் எழும்புக்கூடுகள் பற்றிய அகழாய்வுகள் தமிழகத்தில் செய்யப்பட வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads