தமிழீழ தேசியத் தொலைக்காட்சி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தமிழீழ தேசியத் தொலைக்காட்சி என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் நடத்தப்பட்ட செய்மதித் தொலைக்காட்சி சேவையாகும். 2001 மார்ச்சு 26 அன்று தொடங்கப்பட்ட இத்தொலைக்காட்சி சேவையின் தலைமை நிலையம் கிளிநொச்சியில் அமைந்திருந்தது. இச்சேவையே இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது செய்மதித் தொலைக்காட்சி சேவையாகும். ஒவ்வொரு நாளும் இரண்டு மணிநேரம் ஒளிபரப்பானது. இலங்கை, இந்தியா, மாலைதீவு, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் செய்மதித் தொடர்பு மூலம் இதனைப் பார்க்க முடிந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ தொலைக்காட்சி சேவையாகும். இது கிளிநொச்சி நகரிலிருந்து ஒளிபரப்புச் செய்யப்பட்டது. இது ஒளிபரப்பினை 2005 ஆகத்து 1 அன்று தென்கிழக்கு ஆசியாவில் தொடங்கியது.

2007 ஆம் ஆண்டு வரை சுந்தர் பொறுப்பு வகித்தார். 2007 ஆகத்து 1 முதல் 2008 வரை துளசிச்செல்வன் பொறுப்பு வகித்தார். இறுதியாக திலகன் பொறுப்பு வகித்தார். 2008 மாவீரர் நாளுக்குப் பிறகு தமிழீழ தேசியத் தொலைக்காட்சி இயங்க முடியாத நிலை ஏற்பட்டது.

Remove ads

பணி

இத்தொலைக்காட்சி ஈழ விடுதலையின் அவசியத்தை உலகளாவிய தமிழ் மக்களுக்கு எடுத்துச் செல்லும் பணியைச் செய்து வந்தது. இலங்கை இராணுவத்தின் படை முன்னெடுப்பு நடவடிக்கைகளை உடனுக்குடன் செய்தியாக வெளியிட்டு ஈழ மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்து வந்தது. இத்தொலைக்காட்சியில். விடுதலைப் புலிகளின் நிதர்சனம், ஒளிவீச்சு போன்ற பிரிவுகளால் தயாரிக்கப்படும் குறும்படங்கள், ஆவணப்படங்கள், மாவீரர் காணொளிகள், படைத் தளபதிகளின் செவ்விகள் போன்றவை ஒளிபரப்பப்பட்டு வந்தன.

Remove ads

நிதர்சனம்

ஒளிவீச்சு

ஒளிவீச்சு என்ற பிரிவு பல நேரடிச் சமர்களைப் படம்பிடித்து வெளியிட்டு வந்தது. உண்மையான காட்சிப் பதிவின் மூலம் பல ஆவணத் திரைப்படங்களை வெளியிட்டு வந்தது. இப்பிரிவில் இருந்த போராளிகள் சண்டை நடக்கும் பொழுது சக போராளிகளுடன் இணைந்து படப்பிடிப்புச் செய்து வந்தவர்கள். இவர்களுள் இசைப்பிரியாவும் ஒருவர்.

இவற்றையும் பார்க்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads