தமிழ்நாடு அரசு நலிந்தோர் குடும்ப நல உதவித் திட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வறுமையில் வாழும் ஏழைக் குடும்பத்தில் உழைத்து பொருளீட்டும் நபர் இறந்து போய்விட்டால் அந்தக் குடும்பத்துக்கு உதவும் வகையில் நிதியுதவி அளிக்கும் ffஇத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
நிபந்தனைகள்
இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற கீழ்காணும் நிபந்தனைகளுக்குட்பட்டிருக்க வேண்டும்.
- இயற்கையான மரணமாக இருக்க வேண்டும். விபத்து, தற்கொலை கொண்டவர் குடும்பம் இந்த உதவியைக் கோர முடியாது.
- மரணமடைந்தவர் குடும்பத் தலைவராக, அவர் மட்டுமே குடும்பத்தில் வருமானம் தேடித் தரும் நபராக இருந்திருக்க வேண்டும்.
- மரணமடைந்தவரின் வயது 60-க்குள் இருக்க வேண்டும்.
- குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் பிள்ளைகள் இருக்கக் கூடாது. 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் பிள்ளை சம்பாதிக்க முடியாத நிலையில் (உடல் ஊனமுற்றவர் அல்லது படித்துக் கொண்டிருப்பவராக இருத்தல்) இருந்தால் இவ்வுதவியைப் பெற இயலும்.
- குடும்ப ஆண்டு வருமானம்7,200க்குள் இருக்க வேண்டும். விவசாயத் தொழில் செய்து வருபவர்களாக இருந்தால் 2.5 ஏக்கர் பாசன நிலம் வைத்திருப்பவர்கள் அல்லது 5 ஏக்கர் பாசனமில்லா நிலமுடைய விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறமுடியும்.
- சாதி, மதம் போன்ற பிற கட்டுப்பாடுகள் இல்லை.
Remove ads
விண்ணப்பப் படிவம்
வருவாய்த்துறையின் கீழான தாலுகா அலுவலகத்தில் இந்த விண்ணப்பப் படிவம் கிடைக்கும். இந்த விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதுடன்
- குடும்பத் தலைவர் இறப்புச் சான்றிதழ்
- வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் போன்றவற்றில் கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர் ஆகியவர்களிடம் கையொப்பம் பெற்றிருக்க வேண்டும்.
-போன்றவைகளையும் இணைத்து தாலுகா அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
அதிகாரிகள் ஆய்வு
விண்ணப்பப் படிவங்கள் அனைத்தும் தாலுகா அலுவலகத்தில் ஆய்வு செய்யப்பட்டு வட்டாட்சியரின் முறையான விசாரணைக்குப் பின் அனைத்தும் சரியாக இருக்கும் நிலையில் இந்த உதவித் தொகை அளிக்கப்படுகிறது.
உதவித் தொகை
இத்திட்டத்தில் உதவி பெறுபவர்களுக்கு நிதியுதவியாக ரூபாய்10,000 உதவித் தொகையாக அளிக்கப்படுகிறது
குறிப்பு
குடும்பத்தை பொருளீட்டிக் காப்பாற்றுபவர் என்றுதான் இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஆண், பெண் என்கிற பேதமில்லை. எனவே ஒரு குடும்பத்தில் பெண்தான் குடும்பத்துக்கு நிதி ஆதாரமாக இருந்தார் என்பது உண்மை எனில் உரிய சான்றுகளுடன் அக்குடும்பம் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துப் பயன் பெற முடியும்.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads