தமிழ்நாடு கிராம வங்கி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தமிழ்நாடு கிராம வங்கி (Tamil Nadu Grama Bank) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு மண்டல ஊரக வங்கியாகும் .

விரைவான உண்மைகள் வகை, முந்தியது ...
Remove ads

தோற்றம்

தமிழ்நாடு கிராம வங்கி என்பது தமிழகத்தில் செயல்படும் ஊரக வங்கியாகும். இந்த வங்கி மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குக் கூட்டாகச் சொந்தமானது மற்றும் இந்தியன் வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுகின்றது. இது இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் சொத்துரிமையின் கீழ் உள்ளது.

தமிழ்நாடு கிராம வங்கி 1 ஏப்ரல் 2019 அன்று பழைய பல்லவன் கிராம வங்கி மற்றும் பாண்டியன் கிராம வங்கி இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. இந்திய அரசின் அராசாங்க அறிவிக்கை எண். 363 தேதி 28 ஜனவரி 2019 மூலம் இது செயல்படுத்தப்பட்டது.[1][2][3]

Remove ads

செயல் எல்லை

இணைப்பிற்கு முன்பு சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்ட பல்லவன் கிராம வங்கி 16 மாவட்டங்களிலும், விருதுநகரைத் தலைமையிடமாகக் கொண்ட பாண்டியன் கிராம வங்கி 16 மாவட்டங்களிலும் செயல்பட்டு வந்தது. இணைப்பிற்குப் பிறகு, சென்னையைத் தவிர, தமிழகத்தின் மற்ற 37 மாவட்டங்களிலும், சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு கிராம வங்கியாக வங்கி இது செயல்படுகிறது.

பங்கு மூலதனம்

செலுத்தப்பட்ட மூலதனம் ரூ. 46.96 கோடிகளைப் பங்குதாரர்கள் கீழ்க்கண்டவாறு பகிர்ந்துள்ளனர்:

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads