தமிழ்நாடு தகவல் ஆணையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்நாடு தகவல் ஆணையம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இது தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 இன் பிரிவு 15 இன் துணைப் பிரிவு (1) இன் படி முதன் முதலில் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். [1]
ஆரம்பத்தில், இது மாநிலத் தலைமைத் தகவல் ஆணையரும் இரண்டு மாநில தகவல் ஆணையர்களையும் அரசாணை எண்.988, 7 அக்டோபர் 2005 தேதியிட்ட பொதுத் துறை ஆணையின் படி கொண்டிருந்தது.[2] [3] அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் அரசாணை எண் 72 இன்படியும் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் (AR3) துறை ஆணையை 10 ஏப்ரல் 2008 இன்படியும், மாநிலத் தகவல் ஆணையர்களின் எண்ணிக்கை இரண்டிலிருந்து ஆறாக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் தலைமைத் தகவல் ஆணையர் ஒருவரும் மாநிலத் தகவல் ஆணையர்கள் அறுவரும் உள்ளனர்.
Remove ads
வரலாறும் குறிக்கோளும்
தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையம் பின்வருவனவற்றை மேற்கொள்கிறது:[4][5]
- தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு அரசு நிறுவனங்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல் மீதான மேல்முறையீடு.
- தகவல் கொடுக்க மறுப்பது அல்லது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை தாக்கல் செய்ய இயலாமை தொடர்பான புகார்கள்.
- தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-ன் கீழ் பெறப்பட்ட புகார்கள் மற்றும் அதற்கான பதில்கள் குறித்து மாநிலத்தில் பணிபுரியும் பல்வேறு துறைகளிடமிருந்து ஆணையம் ஆண்டு அறிக்கையைப் பெற வேண்டும்.
தமிழ்நாடு தகவல் ஆணையம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) 2005-ஐ பொது மக்களால் திறம்பட செயல்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அவ்வப்போது நடத்துகிறது. மத்திய அரசு தொடர்பான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ள மனுக்கள் மீதான மேல்முறையீடு செய்யும் மத்திய தகவல் ஆணையத்திலிருந்து இது வேறுபட்டது, மாநில மனுக்கள் மீதான் மேல்முறையீட்டைச் செய்கிறது.[6]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads