தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி

அமைப்பு From Wikipedia, the free encyclopedia

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி
Remove ads

தமிழ்நாடு‍ தீ்ண்டாமை ஒழிப்பு முன்னணி துவக்க கூட்டம் 14.08.2007 அன்று மதுரை வில்லா புரத்தில் உள்ள வீராங்கனை லீலாவதி அரங்கத்தில் நடைபெற்றது.

விரைவான உண்மைகள் தலைமையகம், பொது செயலாளர் ...

தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்பது தலித் இயக்கங்கள், தொழிற்சங்கங்கள், வெகுசன அமைப்புகள், விவசாய சங்கங்கள் உள்ளிட்ட இயக்கங்களின் கூட்டு மேடையாக உருப்பெற்றது. இம் முன்னணியில் இணைந்துள்ள இயக்கங்கள் எல்லாம் சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஏற்கனவே போராடி வந்துள்ள அமைப்புகள் தான் என்றாலும் இவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாடு மேலும் வீச்சோடும் வீரியத்தோடும் அமையும் என்பதே இதில் உருவாக்கத்திற்கான காரணமாகும்.

இதன் பெயரில் உள்ள "தீண்டாமை ஒழிப்பு" என்பது உடனடி கடமையை சுட்டிக் காட்டுவதே அல்லாது அதன் இலக்கு "சாதி ஒழிப்பு" என்பதே.

இத்தகைய புரிதலோடும் லட்சியத்தோடும் உருவாக்கப்பட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் மாநில மாவட்ட மட்டங்களில் சாதி பாகுபாடுகள், ஒடுக்குமுறைகளுக்கு எதிராக களம் கண்டு வரும் நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்து கைகோர்த்துள்ளன.

தமிழ்நாட்டில் தீண்டாமை, வன்கொடுமைகள் நிகழ்கிற இடங்களில் எல்லாம் தலையிடுகிற, தீர்வு காண்கிற அமைப்பாக இது பயணித்து வருகிறது. தீண்டாமை வடிவங்களை அம்பலப்படுத்துகிற கள ஆய்வுகள், நேரடி இயக்கங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி - உடனடி நிவாரணம் ஆகியன இதன் தொடர் செயல்பாடுகளாக உள்ளன.

மேலும் சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிரான தனிச் சட்டம், கழிவகற்றும் பணியில் முழுமையான இயந்திர மயம், அருந்ததியர் உள் ஒதுக்கீடு பாதுகாப்பு, எஸ்.சி,எஸ்.டி துணைத்திட்ட அமலாக்கத்தை பலப்படுத்துதல், தலித் உள்ளாட்சித் தலைவர்களின் சுதந்திரமான செயல்பாடு, இட ஒதுக்கீடு அமலாக்கம், தனியார் துறை இட ஒதுக்கீடு உள்ளிட்ட பட்டியல் சாதி பழங்குடி மக்களின் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு தளங்களிலான கோரிக்கைகளை முன்னிறுத்தி பன்முனைகளில் செயல்பட்டு வருகிறது.

Remove ads

மாநாடுகள் மற்றும் தலைமை

இம்முன்னணியின் முதல் மாநில மாநாடு 2010 ல் புதுக்கோட்டையில் நடைபெற்றது. தலைவராக பி.சம்பத், பொதுச் செயலாளராக கே.சாமுவேல்ராஜ், பொருளாளராக ஆர்.ஜெயராமன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

2015 மே 16 முதல் 18 வரை இரண்டாவது மாநில மாநாடு விருதுநகரில் நடைபெற்றது.

இயக்கங்கள்

தீண்டாமைச் சுவர் தகர்ப்பு

உத்தப்புரம்

உத்தப்புரம் தீண்டாமைச் சுவரை அகற்றக் கோரி பல கட்டப் போராட்டங்களை நடத்தி, தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்டது.[1]

உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் தகர்ப்பிற்கு பின்னர் முன்னணியின் முயற்சியால் வீழ்ந்த சுவர்கள் [சான்று தேவை]-

  • கோயம்பத்தூர் நாகராஜபுரம்
  • கோயம்பத்தூர் பெரியார்நகர்
  • திருச்சி எடமலைப்பட்டி புதூர்
  • சேலம் காந்திமகான் நகர்

ஈச்சங்கோட்டை

ஈச்சங்கோட்டை கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் சவரம் செய்யும் கடைகளில் முடி‍ திருத்தம் செய்ய அனுமதிக்கப்படாததை எதிர்த்த இயக்கம் செப்டம்பர் 30 அன்று‍ நடைபெற்றது. போராட்டத்தின் விளைவாக அம்மக்கள் முடிதிருத்த அக்கடைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.[2]

ஆலய நுழைவுப் போராட்டங்கள்

பந்தப்புளி, உத்தப்புரம், செட்டிபுலம், காங்கியனூர் ,காளப்பட்டி முதலிய இடங்களில் ஆலய நுழைவுப் போராட்டங்கள் நடைபெயற்றுள்ளன.[சான்று தேவை]

தெம்மாவூர் பேருந்து நிழற்குடை இருக்கை

தலித்துகள் இருக்கையில் அமரக்கூடாது என்ற சாதி ஆதிக்க வெறியில் இடிக்கப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடை இருக்கைகள் மீண்டும் நிறுவப்பட்டது.[3]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads