தமிழ்நாடு நீர்வளத் துறை

From Wikipedia, the free encyclopedia

தமிழ்நாடு நீர்வளத் துறை
Remove ads

நீர்வளத் துறை (ஆங்கிலம்:Water Resources Department) என்பது தமிழ் நாட்டின் நீர்வளத்தை மேலாண்மை செய்யும் அரசு துறையாகும். 2021 ஆம் ஆண்டு பொதுப் பணித்துறையிலிருந்து நீர்வளத் துறை தனியாகப் பிரிக்கப்பட்டு, பாசன திட்டங்களான அணைகள், கால்வாய்கள், ஏரிகள், ஆறுகள், நிலத்தடி நீராதாரங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தி பராமரிக்கும் பணிகளை இத்துறை செய்துவருகிறது.[1][2] இத்துறையின் அமைச்சராக துரைமுருகன் உள்ளார்.

விரைவான உண்மைகள் துறை மேலோட்டம், ஆட்சி எல்லை ...
Remove ads

பிரிவுகள்

நீர்வளத் துறையில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நான்கு மண்டலங்களும் ஏழு பிரிவுகளும் உள்ளன.[3] சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையுடன் மாநில நீர்வள மேலாண்மை முகமையும் இணைக்கப்பட்டு 2018 இல் தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைப்பு கழகம் உருவாக்கப்பட்டது.[4]

அலுவலகங்கள்

  1. இயக்கம் மற்றும் பராமரிப்பு[5]
  2. திட்ட உருவாக்கம்
  3. மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவர குறிப்பு மையம்
  4. வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதாரம்
  5. நீர் ஆய்வு நிறுவனம்
  6. அலுவலர் பயிற்சி நிலையம்
  7. கொதிகலன்கள் இயக்ககம்
மேலதிகத் தகவல்கள் அமைப்புகள், பணிகள் ...
Remove ads

குறிக்கோள்கள்

இத்துறையின் மூலம் செய்யப்படும் பணிகள்.

  • பாசன அமைப்புகளின் கட்டுமானம் மற்றும் கட்டுமானமில்லாத பகுதிகளை மேம்படுத்தி பராமரித்தல்.
  • புதிய பாசன ஆதாரங்களை மேம்படுத்தல், நீர்வழிப் பாதைகள் மற்றும் வடிகால் வசதிகளை பராமரித்தல்.
  • சாத்தியமான பாசன திட்டங்களை ஆய்ந்து மதிப்பிட்டுக் கண்டறிதல்.
  • கட்டுமானப் பொருட்கள், நீரியல் மற்றும் நீர்நிலையியல் தொடர்பான பரிசோதனை மற்றும் ஆய்வுகளைச் செய்தல், நிலத்தடி நீரின் இருப்பு மற்றும் அதன் தரத்தை பரிசீலித்தல்


Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads