தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்நாடு மார்க்சிய லெனினிய கட்சி தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளில் ஒன்றாகும்.[1] டிசம்பர் 12 1992 அன்று கார்முகில் தலைமையில் தொடங்கப்பட்ட அரசியல் கட்சியாகும். நீண்ட காலமாக தேர்தல் நடவடிக்கையில் யாரையும் ஆதரிக்கவும் இல்லை[2] [3]. தேர்தலில் பங்கேற்கவும் இல்லை. ஆனால் 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையில் உருவான கூட்டணியை ஆதரித்தது. இக்கட்சியின் சித்தாந்த அரசியல் அமைப்புத் தலைவராக தோழர் கார்முகில் உள்ளார். தோழர் கார்முகில் 7-5-1969 ஆண்டு பாவலரேறு பெருஞ்சிதிரனார், தமிழக விடுதலைப் படை ஒன்றை அமைக்கும் நோக்கில் கூட்டப்பட்ட நிகழ்வில் இரத்தக் கையழுத்து இட்டதாக பெருஞ்சித்திரனாரின் வாழ்க்கை குறிப்புகள் தெரிவிக்கின்றன. இதுவே தோழர் கார்முகில் அரசியல் வாழ்வு தொடக்கமாக கருதப்படுகிறது. இக்கட்சியின் முக்கிய வெளிப்படை அமைப்பு புரட்சிகர இளைஞர் முன்னணி ஆகும்[4]. 1980 இறுதியில் கார்முகில் தமிழ்நாடு அமைப்புக் குழு, (த.நா.அ.கு -TNOC) ,இ.பொ.க.(மா-லெ)) என்ற கட்சியை உருவாக்கினார்.. 1992ல் அரசியல் நிலைபாடுகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சி - தநாமாலெக (Tamilnadu Marxist Leninist Party - TNMLP) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தநாமாலெக-விற்கும் தோழர் கார்முகிலே பொதுச்செயலாளராக தலைமையளித்து வருகிறார். இதன் செயல்கள் தமிழ் தமிழ் நாடு என்றுள்ளது. இதன் திட்டம் தமிழகத்தில் சோசலிச கம்யூனிச வாழ்வை ஏற்படுத்துவதாகும். இவ்வமைப்பு 2012ல் நமது கட்சி என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இப் புத்தகம் காரல்மார்க்ஸ் தொடங்கி வைத்த முதல் அகிலத்தின் கருத்துகளில் தொடங்கி இக்கட்சியின் நிலைபாடுகள் வரை தொடர்ச்சியாக விளக்குகிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads