தமிழ்நாடு மாவட்ட விவரச்சுவடிகள்
மாவட்ட விவரங்கள் குறித்த ஒரு கலைக்களஞ்சியம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்நாடு மாவட்ட விவரச்சுவடிகள் அல்லது சென்னை மாவட்ட விவரச்சுவடிகள் (Tamil Nadu District Gazetteers) என்பன தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட மாவட்ட கலைக்களஞ்சியங்கள் ஆகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வரலாறு
மாவட்டங்களுக்கு என தனியான மாவட்ட விவர ஏடுகள் வேண்டும் என்ற கருத்துகள் 19ஆம் நூற்றாண்டின் இடையில் உருவாயின. இதில் 1868 இல் ஜே. எச். நெல்சன் அவர்களால் வெளியிடப்பட்ட சென்னை மாவட்ட விவரச்சுவடி என்பது இதில் முதல் விவர ஏடு ஆகும். இதைத் தொடர்ந்து தென் ஆற்காடு மாவட்ட விவரச்சுவடி (ஜான் ஹென்றி கார்ஸ்டின், 1878), திருச்சிராப்பள்ளி மாவட்ட விவரச்சுவடி (லூயிஸ் மூர், 1878), செங்கல்பட்டு மாவட்ட விவரச்சுவடி (சி. எஸ். கிரோல், 1879), திருநெல்வேவேலி மாவட்ட விவரச்சுவடி (ஏ.ஜே. ஸ்டூவர்ட், 1879), நீலகிரி மாவட்ட விவரச்சுவடி (எச். பி. க்ரிக், 1880), வட ஆற்காடு மாவட்ட விவரச்சுவடி (ஆர்தர் எஃப். காக்ஸ், 1881), சேலம் மாவட்ட விவரச்சுவடி (எச். லு பானு, 1883), தஞ்சாவூர் மாவட்ட விவரச்சுவடி (டி. வெங்கடாசுவாமி, 1883) மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட விவரச்சுவடி (எஃப். ஏ. நிக்கல்சன், 1887) ஆகியவை வெளியிடப்பட்டன.
1900களின் தொடக்கத்தில், இந்த கையேடுகளில் உள்ள தகவல்கள் காலாவதியாகிப் போயின. எனவே, இந்த மாவட்ட விவர ஏடுகள் விரிவாக திருத்தப்பட்டு, விரிவாக்கப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டன. முதன்முதலில் இவ்வாறான திருத்தப்பட்ட பதிப்புகள் 1908 ஆம் ஆண்டுமுதல் வெளியாயின. பிரித்தானிய இந்தியா மற்றும் விடுதலையடைந்த இந்தியா என இரு காலகட்டத்திலும் ஏராளமான விவரச்சுவடிகள் வெளியாயின. இந்தப் பணிகளை முதன்மையாக சென்னை ஆவணக் காப்பகத்தின் பி. எஸ். பாலிகாவால் கையாளப்பட்டன.
Remove ads
மேற்கோள்கள்
- "District Gazetteers". Archives, Government of Tamil Nadu.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads