தமிழ்நாடு (இதழ்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்நாடு நாளிதழ் இந்தியாவில் தமிழகத்தில் வெளிவந்த தமிழ் நாளிதழ். ஆரம்பத்தில் வார இதழாக வெளிவந்து பின்னர் நாளிதழாக மாறிற்று. இந்திய தேசிய காங்கிரசுக்கு ஆதரவாக இருந்த நாளிதழ். டாக்டர் வரதராசுலு இவ்விதழின் நிறுவனர் மற்றும் ஆசிரியர். இவர் சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்தில் முன்னணியில் இருந்தவர். மேலும் இவர் அக்குருகுலத்தில் சமபந்திக் கல்விமுறை வரவேண்டும் என்று போராடியதால் பிராமணர்களின் வெறுப்பைத் தேடிக் கொண்டதன் விளைவாக தமிழ்நாடு நாளிதழின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட தினமணி நாளிதழ், தமிழ்நாடு நாளிதழுக்குப் போட்டியை வளர்த்ததால் தமிழ்நாடு நாளிதழ் விற்பனை பாதிக்கப்பட்டது.[1]
இதன் ஆசிரியராக பணியாற்றியவர் வேங்கடராசுலு. அப்போதைய அவரது மாதச் சம்பளம் ரூபாய் இருநூறு. 1934 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் ஆண்டிலிருந்து 1935 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் வரை இதன் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர் நெ.து.சுந்தரவடிவேலு. இவரது மாதச் சம்பளம் ரூபாய் 35.பத்திரிக்கையின் பொருளாதார நெருக்கடியால் இவர் பதவி விலக நேர்ந்தது.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads