தமிழ்நாடு வேளாண்மைத் தொழிற்துறை

From Wikipedia, the free encyclopedia

தமிழ்நாடு வேளாண்மைத் தொழிற்துறை
Remove ads

தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் வேளாண்மையும் அதனுடன் தொடர்புடைய உணவுப் பதனிடல், பகிர்ந்தளிப்பு, விற்பனை, ஆய்வு ஆகிய செயல்பாடுகளையும் தமிழ்நாடு வேளாண்மைத் தொழிற்துறை குறிக்கின்றது. தமிழக மக்களுக்கு வேளாண்மை வெறும் ஒரு தொழில் மட்டுமல்லாமல் ஒரு வாழ்வு முறையும் ஆகும். தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலனவர்கள் மரபுரீதியாக வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டவர்கள். இன்றும் பெரும்பான்மையானவர்கள் இந்த துறையிலேயே இயங்கிவருகின்றார்கள். தமிழ்நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மைத் தொழிற்துறை 21 % பங்கு வகிக்கின்றது. தமிழ்நாட்டு பொருளாதாரத்தின் மிக முக்கியமான துறையாக வேளாண்மை உள்ளது. மாநில மக்கள் தொகையில் 70%, விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த நடவடிக்கைகளில், தங்கள் வாழ்வாதாரத்திற்காக ஈடுபட்டுள்ளனர்[1]

Thumb
உழவர்
Remove ads

வேளாண்மை

Thumb
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டம்.

மரவள்ளி கிழங்கு உற்பத்தியில் இந்தியாவில், தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.[2]. கரும்பு சாகுபடியில் இந்தியாவில், தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது[3]. சப்போட்டா உற்பத்தியில் இந்தியாவில், தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது[4]. அரிசி உற்பத்தியில் இந்தியாவில், தமிழ்நாடு ஆறாவது இடத்தில் உள்ளது. பருத்தி உற்பத்தியில் இந்தியாவில், தமிழ்நாடு ஓன்பதாவது இடத்தில் உள்ளது[5].

தமிழ்நாட்டில் விளையும் முக்கிய பழங்கள்

வாழை,மாம்பழம், கொய்யா, பலா. தமிழ்நாட்டில் விளையும் மாம்பழ வகைகள் மல்கொவா, அல்பொன்சா, ரூமானி, நீலம் ஆகும். கீழே தமிழ்நாட்டில், பழங்கள் விளையும் முக்கிய இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன

மேலதிகத் தகவல்கள் பழம், இடம் ...

தமிழ்நாட்டில் விளையும் முக்கிய காய்கறிகள்

மரவள்ளி கிழங்கு, தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய் மற்றும் முருங்கை. கீழே தமிழ்நாட்டில், காய்கறி விளையும் முக்கிய இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன

மேலதிகத் தகவல்கள் காய்கறி, இடம் ...

தமிழ்நாட்டில் விளையும் முக்கிய வாசனைப்பொருட்கள்

கறிவேம்பு[கறிவேப்பிலை], மஞ்சள், கொத்துமல்லி, மிளகாய், புளி. கீழே தமிழ்நாட்டில், மசாலா விளையும் முக்கிய இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன

மேலதிகத் தகவல்கள் மசாலா, இடம் ...

தமிழ்நாட்டில் விளையும் முக்கிய பூக்கள்

மல்லிகை, முல்லை, சாமந்தி, ரோஜா, செவ்வந்தி. ஓசூர் நகரில் இருந்து ரோஜா ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது[9]. கீழே தமிழ்நாட்டில், பூக்கள் விளையும் முக்கிய இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன[10].

மேலதிகத் தகவல்கள் பூ, இடம் ...
Remove ads

நெல்

தமிழ்நாட்டில், சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் நெல் விளைகிறது. நெல் விளையும்(பரப்பளவில்) முக்கிய மாவட்டங்கள் : திருவாரூர் (8.9 %), தஞ்சாவூர் (8.8 %), நாகப்பட்டினம் (8.7 %), விழுப்புரம் (7.9 %), இராமநாதபுரம் (6.9 %)[11]. தமிழ்நாட்டில், 2009-2010ல் மொத்த நெல் விளைச்சல் 50.43 லட்ச டன்கள்.

தமிழ்நாட்டில் சராசரி நெல் உற்பத்தி, இந்திய சராசரியை விட அதிகம். உதாரணமாக, தமிழ்நாட்டில் 2008-09ல் நெல் மகசூல், ஒரு ஹெக்டெருகு 2510 கிலோ கிராம், இது இந்திய சராசரியை[2186 கிலோ/ஹெக்டெர்] விட 324 கிலோ கிராம் அதிகம்[11].

மேலதிகத் தகவல்கள் பயிர், மாதம் ...

கோயம்புத்தூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை வட்டங்களில் அமராவதி, பவானி, ஆழியாறு, பாசன வசதியால் நெல் மிகுதியாக விளைகிறது. நெல், சோளம், கம்பு, ராகி, திணை, சாமை வரகு, முதலியவை கோயம்புத்தூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படுகின்றன.

Remove ads

குழம்பி

தமிழ்நாடு, குழம்பி தயாரிக்கும் முக்கிய மாநிலங்களில் ஒன்று. குழம்பி தயாரிப்பில் கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது. நீலகிரி மாவட்டம், ஏற்காடு, கொடைக்கானல் ஆகிய இடங்களில் குழம்பி விளைகிறது.

  • நீலகிரி மாவட்டத்தில் விளையும் பரப்பு: அராபிக்கா - 36,00,000 சதுர மீட்டர், ரொபோஸ்டா - 40,00,000 சதுர மீட்டர்[12]
  • நீலகிரி மாவட்டத்தில் விளையும் முக்கிய வகைகள் : அராபிக்கா - எஸ்.795, கே என்ட்ஸ், காவிரி ரொபோஸ்டா - பி எர்டினியா, எஸ்.274, சிஎக்ஸ்ஆர்
  • நீலகிரி மாவட்டத்தின் சராசரி உற்பத்தி : அராபிக்கா - 1,400 மெட்ரிக் டன்கள், ரொபோஸ்டா - 2,800 மெட்ரிக் டன்கள்
  • புள்நெய்ஸ் கொடைக்கானல் மலையில் விளையும் முக்கிய வகை: அராபிக்கா, பரப்பு: 140,00,000 சதுர மீட்டர், சராசரி உற்பத்தி : 7500 மெட்ரிக் டன்கள்[13].
  • சேர்வராயன் ஏற்காடு மலையில் விளையும் முக்கிய வகை: அராபிக்கா, பரப்பு: 50,00,000 சதுர மீட்டர், சராசரி உற்பத்தி : 3,000 மெட்ரிக் டன்கள்[14].

தேயிலை

தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விளைகிறது. நீலகிரி தேயிலை வாசனையுள்ள , இருண்ட நிறம் கொண்டதாகும். தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம்[தமிழ்நாடு அரசு] 1968 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து திரும்பிய மலை வாழ் மக்களின் மறுவாழ்வுகாக தொடங்கப்பட்டது. தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தேயிலைத் தோட்டம் 4500000 பரப்பளவில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் அமைந்துள்ளது. தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம்[டான்டீ] தொழிற்சாலை கூடலூர், குன்னூர், கோத்தகிரி, வால்பாறை ஆகிய இடங்களில் அமைந்துள்ளது[15].

Remove ads

தேங்காய் உற்பத்தி

தேங்காய் உற்பத்தியில் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. 2014-15 ஆம் ஆண்டுக் கணக்கின் படி 6917.46 மில்லியன் (ஏறத்தாழ 691 கோடி) காய்களை தமிழகம் உற்பத்தி செய்தது.[16]


ஒப்பந்தப் பண்ணையம் மற்றும் சேவைகள் சட்டம் , 2019

அகில இந்திய அளவில் ஒப்பந்த சாகுபடி முறைக்கென்று பிரத்யேகமாக எந்த சட்டமும் எந்த மாநிலத்திலும் இது வரை இயற்றப்படாத நிலையில், தமிழ்நாடு அரசு முதன் முதலில் தனிச் சட்டம் ஒன்றை 2019 அக்டோபர் இல் ,வடிவமைத்துள்ளது என்பது இதன் தனிச்சிறப்பு. கொள்முதலாளர் அல்லது உணவு பதப்படுத்தும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் விவசாயிகள் அல்லது உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்களது விளைபொருட்கள் அல்லது கால்நடைகள் அல்லது அதிலிருந்து உற்பத்தி செய்யப் பட்ட பொருட்களை ஒப்பந்தம் செய்த அன்று, நிர்ணயம் செய்த விலையிலேயே பரிமாற்றம் செய்வதற்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

Remove ads

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads