தமிழ்நூல்களின் பட்டியல் (யேர்மன் நூல்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தமிழ்நூல்களின் பட்டியல் (யேர்மன்: Verzeichnis der Malabarischen Bücher) என்பது 1709 ஆம் ஆண்டளவில் யேர்மன் மொழியில் பர்த்தலோமேயு சீகன்பால்க் அவர்களால் தொகுக்கபட்ட ஒரு விபரப்பட்டியல் ஆகும். தமிழ் நூற்கள் அல்லது சுவடிகள் பற்றிக் கிடைக்கும் ஆகப் பழமையான நூற்பட்டியல் அல்லது நூற்றொகை இதுவென்றே ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.[1] இந்த நூலில் அறியப்பெற்ற தமிழ் இலக்கியங்கள் பற்றியும் விரிவான குறிப்புகள் கிடைக்கின்றன.[2]

இந்த நூலின் பிரதி ஒன்று பிரித்தானியா அருங்காட்சியகத்தின் சுவடிகள் திணைக்களத்தில் உள்ளது.[2]

இந்த நூலில் மலபார் என்று குறிப்பிடுவது தமிழை அல்லது தமிழ் பேசும் மக்களை ஆகும். தமிழ் Tamul என்றும் குறுக்கப்பட்டுள்ளது.[2]

இந்த நூல் 1967 ஆம் ஆண்டு ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads