தமிழ் (சொல்லாட்சி)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சங்கநூல்களில் காணப்படும் தமிழ், தமிழகம், தமிழ்நாடு, தமிழர், தமிழ்நர் முதலான தமிழ் சொல்லாட்சிகள் இங்குத் தொகுத்துக் காட்டப்படுகின்றன.

சொல்லாக்கம்

தமிழ் என்னும் சொல் ‘அக்கு’ச்சாரியை பெற்றுப் புணரும் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. தமிழக்கூத்து, தமிழச்சேரி, தமிழத்தோட்டம், தமிழப்பள்ளி என வரும் என்று இளம்பூரணர் அதற்கு எடுத்துக்காட்டு தருகிறார். [1]

புலவர் பெயர்

மதுரைத் தமிழக்கூத்தனார் பெயரில் தமிழக்கூத்து பற்றிய செய்தி சுட்டப்பட்டுள்ளது. இதன் வேறுவகை ஆரியக்கூத்து.

தமிழ் வளர்ச்சி

  • (தமிழ்)மொழி வளரப் புகார் நகரில் சோறு வழங்கும் அறச்சாலை இருந்தது [2]
  • (தமிழ்)மொழியில் பொதுமொழி, புதுமொழி, மதிமொழி, முதுமொழி, செதுமொழி என்னும் கூறுபாடுகள் வளர்க்கப்பட்டன. [3]
  • செல்வக் கடுங்கோ வாழியாதன் பகைவென்று கொண்டுவந்த கொண்டிச் செல்வத்தைத் ‘தண்டமிழ்’ செறிவு பெற வழங்கினான் [4]
  • தமிழ் நிலைபெற்ற, தாங்கு அரு மரபின், மகிழ் நனை, மறுகின் மதுரை [5]
  • பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்து எனக் குறிப்பிடப்படுகிறான். [6]
  • பிறமொழி பேசப்பட்ட 'மொழிபெயர் தேயங்களிலும்' மூவேந்தரும் தமிழைக் காத்தனர். [7]

தமிழ்நெறி

  • ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் ‘தமிழ்’ அறிவித்தற்குக் கபிலர் பாடினார் குறிஞ்சிப்பாட்டு [8]
  • 'தமிழ்முழுதறிதல்' என்னும் சொல்லால் தமிழ்ப்பண்பாடு உணர்த்தப்பட்டுள்ளது. தமிழ்ப்பண்பாடு முழுதும் அறிந்த சேரமான் தகடூர் எறிந்த பெருஞ் சேரல் இரும்பொறை முரசுக்கட்டிலில் துயின்ற புலவர் மோசிப்பீரனாருக்குக் கவரி வீசினான். [9]

தமிழகம்


  • இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தமிழகம் விளங்கத் தன் கோலை நிலைநாட்டினான் [10]
  • பிட்டங்கொற்றனைத் தமிழகம் கேட்பப் பாடுவேன் என்கிறார் புலவர் கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்.
  • தமிழகம் ‘முதுபொழில் மண்டிலம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. [11]
  • ‘தண்டமிழ்’ என்னும் சொல்லால் தமிழகம் குறிக்கப்பட்டுள்ளது. பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய நன்மாறன் தண்டமிழ் பொது எனக் கூறிவதைப் பொறுக்கமாட்டானாம். அதனால் அவன் கொண்டி விரும்பும்போதெல்லாம் மன்னர் கொடுத்தார்களாம். [12]
Remove ads

தொடர்கள்

  • தமிழ் என்னும் சொல் பல்வேறு இடங்களில் தமிழ்மொழியை உணர்த்தும் வகையில் கையாளப்பட்டுள்ளது. [13]
  • தமிழ் இசை - தமிழ் அகப்படுத்த இமிழிசை [14]
  • முத்தமிழ் [15]
  • தமிழாற்றல் - தமிழ்மன்னர் ஆற்றல் [16]
  • தமிழ்ப்பாவை - கண்ணகி, மணிமேகலை [17]
  • நற்றமிழ் - சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையை முரசுக்கட்டிலில் அறியாது ஏறிய மோசிகீரனார் 'நல்தமிழ்முழுதறிதல்' வல்லான் எனக் குறிப்பிடுகிறார்.
  • தமிழ்நர் - சோழன் தமிழர் பெருமான் எனக் குறிப்பிடப்படுகிறான். [18]
  • தமிழ்நன்னாடு [19]
  • தமிழ்நாட்டகம் [20]
  • தமிழ்நாடு [21]
  • தமிழக மருங்கு [22]
Remove ads

இதன் வேறு வகையான கண்ணோட்டம்

மேற்கோள் குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads