தம்மிக பிரசாத்

From Wikipedia, the free encyclopedia

தம்மிக பிரசாத்
Remove ads

காரியவசம் திரான கமகே தம்மிக பிரசாத் (Kariyawasam Tirana Gamage Dammika Prasad, பிறப்பு: மே 30 1983), இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் ராகமயைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் சிங்கள துடுப்பாட்ட சங்கம் மற்றும் வடக்கு பஸ்னஹீரா துடுப்பாட்ட அணிகளுக்காகவும் உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.[1]

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...

இவர் கடைசியாக 2015 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளையாடினார். அதன்பின் அடிக்கடி ஏற்பட்ட காயங்களினால் இவருக்கு அணியில் நிலையான இடம் கிடைக்கவில்லை.[2][3][4]

Remove ads

சர்வதேச போட்டிகள்

இவர் உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக இலக்கினை வீழ்த்துவதற்கு இவர் 23 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார்.[5] இந்த சராசரியின் காரணமாக 2006 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். பின் சிட்டகாங்கில் நடைபெற்ற முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 29 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இலங்கை அணி 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[1][6]

பின் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இவரால் சில போட்டிகளில் விளையாட இயலவில்லை.பின் 2008 ஆம் ஆண்டில் இந்திய அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது. இதில் இலங்கை அணியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். ஆகஸ்டு மாதத்தில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமனார். ராகுல் திராவிட் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோர் தனக்குப் பிடித்தமான வீரர்கள் எனத் தெரிவித்திருந்தார்.[7][8] இந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார். பின் 2008 டிசம்பர் மாதத்தில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரின் முதல் ஆட்டப்பகுதியில் இவர் 4 இலக்குகளைக் கைப்பற்றினார். ஆனால் இவருக்கு இரண்டாவது போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

[9][10]

சூன் 2011 ஆம் ஆண்டில் இசுக்காட்லாந்து துடுப்பாட்ட அணி மற்றும் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் துடுப்பாட்டத் தொடரில் இலங்கை அணியில் விளையாடும் அணியில் இடம்பெற்றார்.[11] இந்தத் தொடரில் இரு போட்டிகளில் விளையாடினார். இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு இலக்குகளையும் இசுக்காட்லாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் மூன்று இலக்குகளையும் கைப்பற்றினார்.[12] பின் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் இவர் இடம் பெற்றார். ஆனால் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்தத் தொடரில் அந்த அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார்.[13][14] பின் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடினார்.[15] 2011- 2012 ஆம் ஆண்டுகளில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் சில பந்துவீச்சாளர்களுக்கு காயம் ஏற்பட்டதனால் இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. இதன் மூன்றாவது போட்டியில் 156 ஓட்டங்கள் கொடுத்து இரண்டு இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இலங்கை அணி தோற்றது. இதே அணிக்கு எதிராக இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் விளையாடினார்.[16][17]

Remove ads

சான்றுகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads