தர்மேந்திர யாதவ்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

தர்மேந்திர யாதவ் (Dharmendra Yadav)(பிறப்பு 3 பிப்ரவரி 1979) என்பவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக படவுன் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 16வது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார்.[1][2]

விரைவான உண்மைகள் தர்மேந்திர யாதவ், மக்களவை உறுப்பினர் ...
Remove ads

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தர்மேந்திர யாதவ் 3 பிப்ரவரி 1979 அன்று இட்டாவாவில் உள்ள சைபாயில் அபய் ராம் யாதவ் மற்றும் ஜெய் தேவிக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை அபய் ராம் யாதவ் முலாயம் சிங் யாதவின் தம்பி மற்றும் சிவ்பால் சிங் யாதவின் அண்ணன் ஆவார். சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், தர்மேந்திராவின் உறவினர். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலைச் சட்டப் பட்டம் மற்றும் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

குடும்பம்

தர்மேந்திர யாதவ் 12 பிப்ரவரி 2010 அன்று நீலம் யாதவை மணந்தார்.[1][3] இவருக்கு ஒரு சகோதரன் (அனுராக் யாதவ்) மற்றும் இரண்டு சகோதரிகள் (சந்தியா யாதவ் மற்றும் சீலா யாதவ்) உள்ளனர். சீலாவின் மகன் ராகுல் யாதவ், சாது யாதவின் மகளான மருத்துவர் இசா யாதவை மணந்தார்.[4] இவரது சகோதரர் அனுராக் யாதவ் 2017 உபி சட்டமன்றத் தேர்தலில் சரோஜினி நகர் தொகுதியில் போட்டியிட்டார்.[5]

Remove ads

அரசியல் வாழ்க்கை

யாதவ் 2004 இல் 14வது மக்களவைக்கு மைன்புரியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009-ல் 15வது மக்களவைக்கும், 201-இல் 16வது மக்களவைக்கும் பவுடனிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாதுகாப்பு, கிராமப்புற மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளின் நிலைக்குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார்.[1] 2019ஆம் ஆண்டு நடைபெற்ற 17ஆவது மக்களவைத் தேர்தலில் படவுன் தொகுதியில் சுமார் 18,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். சூன் 2022-ல் அசம்கர் இடைத்தேர்தலில் இவர் சுமார் 8,600 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

Remove ads

வகித்த பதவிகள்

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 3 முறை தர்மேந்திர யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[6]

மேலதிகத் தகவல்கள் #, முதல் ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads