தறி (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தறி என்பது 1 ஏப்ரல் 2019 முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பான ஒரு நாடகத் தொலைக்காட்சி தொடர் ஆகும்.[1][2] இந்த தொடரை திரைப்பட நடிகை லலிதா குமாரி தயாரி க்க, இயக்குநர் சக்திவேல் இயக்கியுள்ளார்.
இந்த தொடரில் அன்னலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை ஸ்ரீநிதியும், நட்சத்திரா என்ற கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை அங்கனா ராயும் நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக புதுமுக நடிகர் துருவ் என்ற கதாபாத்திரத்தில் சபரி பிரசாந்த் நடிக்கின்றார். காஞ்சிபுரத்தில் வாழும் நெசவு தொழிலாளியான அன்னலட்சுமி என்ற பெண்ணின் கதை தான் இந்த தறி.[3][4]
Remove ads
நடிகர்கள்
- ஸ்ரீ நிதி - அன்னலட்சுமி
- நவீன உலகில் நெசவு தொழிலின் பாரம்பரியத்தை பாதுகாக்க போராடும் ஒரு ராமசாமி என்ற நெசவாரின் மகள்.
- அங்கனா ராய் - நட்சத்திரா
- நவீன இயந்திரம் மூலம் நெசவு செய்யும் பணக்கார வீட்டு பெண்.
- எம். ராமசாமி - ராமசாமி
- அன்னலட்சுமி மற்றும் வாணியின் தந்தை
- சபரி பிரசாந்த் - துருவ்
- அன்னலட்சுமி யின் சிறுவயது தோழன்.
- எம். ஃபரினா ஆசாத்[5] - வாணி
- ராமசாமியின் மூத்த மகள்.
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads