தலைச்சங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தலைச்சங்கம் (முதற்சங்கம்) (பொ.ஊ.மு. 7000) ஆண்டளவில் நடந்ததெனக் கருத இடம் தருமாறு இறையனார் அகப்பொருள் உரையில் சில கருத்துகள் உள்ளன. தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்தது அங்கு விரிசடைக் கடவுள் ஆதி சிவனே தலைச்சங்கத்திற்குத் தலைவனாகவிருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 4440 ஆண்டுகள் இச்சங்கம் நிலைத்திருந்ததாகவும், 4449 புலவர்கள் இருந்து தமிழாய்ந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. அகத்தியர் எழுதிய அகத்தியம் தலைச்சங்கத்தில் அரங்கேறியது என்பது பொதுவாக நிலவும் கருத்து.
தென்மதுரையில் பாண்டியர்களின் ஆட்சி நிலவியிருந்தது அங்கு 89 அரசர்கள் தென்குமரியை ஆண்டார்கள்.
Remove ads
இக்காலத்து நூற்கள்
அழிவு
பஃறுளி ஆறும் பன்மலை அடுக்கும் முதற் கடற்கோளால் அழிவுற்றன. கடல் கோள் (பொ.ஊ.மு. 2387) நிகழ்ந்தது என்பர்.[1]
சான்றுகள்
இக்கருத்துகளின் உண்மையை உறுதி செய்ய தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள ஒரு சில செய்திகளைத் தவிர்த்து வேறு தொல்லியல் உறுபகரும் சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை.
மேற்கோள்கள்
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads