தவக்குல் கர்மான்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தவக்குல் கர்மான் (Tawakul Karman[1] (அரபி: توكل كرمان), ஓர் யேமன் பெண் அரசியல்வாதி ஆவார். கர்மன் யேமனின் முதன்மை எதிர்கட்சியான அல்-இசுலாவின் மூத்த அங்கத்தினராவார்.[2] இவர் 2005ஆம் ஆண்டு சங்கிலிகள் இல்லாத பெண் இதழியலாளர்கள் என்ற அமைப்பை நிறுவி அதன் தலைவராக மனித உரிமை மீறல்களை கண்டித்து வருகிறார்..[1]
எல்லன் ஜான்சன் சர்லீஃப் மற்றும் லேமா குபோவீயோடு இணைந்து கர்மனுக்கும் 2011ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது.[3]
Remove ads
2011 போராட்டம்
தற்போது நடைபெற்றுவரும் யேமனியப் புரட்சியின் போது தவகேல் கர்மான் அலி அப்துல்லா சாலே யின் அரசுக்கெதிராக மாணவர்களின் பேரணியை சனாவில் ஒருங்கமைத்தார். அரசால் கைது செய்யப்பட்டு, அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்ற கணவரின் புகார்களுக்கிடையே, 24 சனவரியன்று பிணையம் பெற்று வெளியே வந்தார். 28 சனவரி அன்று மீண்டும் ஓ்ர் போராட்டத்திற்கு தலைமையேற்று பெப்ரவரி 3 நாளை "பெருங்கோப நாள்" என அறிவித்தார்.[2] மீண்டும் மார்ச்சு 17 அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.[4]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
