தாடாசனம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தாடாசனம் (Tadasana) என்பது ஓர் உடற்பயிற்சியாக நவீன யோகாவில் நிற்கும் நிலையில் செய்யும் யோகாசனமாகும்.[1][2] [3] இது பல நிற்கும் நிலை ஆசனங்களுக்கு அடிப்படையாகும்.

Thumb
தாடாசனம் அல்லது மலை நிலை ஆசனம்

செய்முறை

  1. நேராக நின்றுகொண்டு நேராகப் பார்க்க வேண்டும்.
  2. கைகளை பக்கவாட்டில் உடலோடு ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும்
  3. இரு கால்களும் உடல் எடையைச் சமமாகத் தாங்க வேண்டும்.
  4. முழங்கால் சிப்பு மேல்நோக்கித் தூக்கியவாறு இருக்க வேண்டும்.
  5. தொடைகளும் பின்பக்கத் தசைகளும் இறுகியவாறு இருக்க வேண்டும்.
  6. மூச்சை உள்ளுக்கு இழுத்து கைகளை மேலே தூக்க வேண்டும்.
  7. கைகளை மேல்நோக்கி உயர்த்தும் நிலையில் கைகள் நேராகவும் விண்ணென்றும் இருக்க வேண்டும்.
  8. கால்களின் நிலையை மாற்றக்கூடாது.
  9. தோள்களுக்கு நேராகக் கைகளைக் கொண்டுவந்ததும் முழங்கைகளை மடக்கிக் கைகளைக் கூப்ப வேண்டும்.
  10. கூப்பிய நிலையில் அக்கைகளின் அடிப்புறம் நேராக (தரைக்கு இணையாக) இருக்க வேண்டும்.
  11. இந்நிலையில் மெதுவாக மூச்சை வெளியே விடவேண்டும்.
  12. மூச்சை மெல்ல உள்ளிழுத்தபடி, மெதுவாகக் கைகளைத் தலைக்கு மேல் உயர்த்த வேண்டும்.
  13. உள்ளங்கைகள் கூப்பிய நிலையில், ஒன்றோடொன்று ஒட்டியிருக்க வேண்டும்.
  14. கைகளை மேல்நோக்கி உயர்த்தியவாறு குதிகால்களை மேலே தூக்க வேண்டும்.
  15. அதே நிலையில் தலையை மேல் நோக்கி உயர்த்த வேண்டும்.

வெளியேறும் விதம்

  1. குதிகாலைக் கீழே இறக்க வேண்டும்.
  2. மூச்சை மெதுவாக வெளியேற்றியபடி கைகளைத் தளர்த்த வேண்டும்.
  3. கைகளைக் கீழே தொங்கப் போடலாம் அல்லது கூப்பிய நிலையிலேயே மார்பை ஒட்டியபடி வைக்கலாம்.
  4. மீண்டும் மூச்சை உள்ளே இழுத்தபடி கைகளையும் குதிகாலையும் தூக்கவும்.
  5. பின்னர் பழையநிலைக்கு வர வேண்டும்.
  6. விரல்களைக் கோத்தபடியும் கைகளை மேலே தூக்கலாம்.
Remove ads

பயன்கள்

நின்றநிலையில் செய்யும் ஆசனங்களுக்கு இது அடிப்படையான ஆசனமாகும். நின்றநிலையில் செய்யும் ஆசனங்களைச் செய்ய இந்த ஆசனப் பயிற்சி உதவுகிறது. இவ்வாசனத்தைச் செய்வதால் உடலின் எல்லாத் தசைகளும் புத்துணர்ச்சி பெறும்; கணுக்கால்கள், தொடைகள், அடி வயிறு, முதுகு ஆகியவை பலமாகும்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads