தாமசு பிக்கெட்டி

பிரெஞ்சு பொருளியலாளர் From Wikipedia, the free encyclopedia

தாமசு பிக்கெட்டி
Remove ads

தாமசு பிக்கெட்டி அல்லது தாமஸ் பிக்கெட்டி (Thomas Piketty. பி. மே 7, 1971) ஒரு பிரெஞ்சு பொருளியலாளர். சொத்து வருவாய் மற்றும் சமனின்மை துறைகளில் ஆய்வு செய்பவர். பாரிசு பொருளியல் பள்ளியில் முனைவராகவும் சமூக அறிவியலில் ஆழமான ஆய்வுகளுக்கான பள்ளியில் கல்வி இயக்குனராகவும் பணிபுரிகிறார்.[1]

விரைவான உண்மைகள் பிறப்பு, தேசியம் ...

2013 ஆம் ஆண்டு பிக்கெட்டி எழுதிய 21ம் நூற்றாண்டில் மூலதனம் (Capital in the Twenty-First Century) எனும் நூல் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நூல் கடந்த 250 ஆண்டுகளின் வருமான வரித் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு உலகில் பரவியுள்ள வருவாய் சமனின்மையை ஆழமாக ஆய்வு செய்கின்றது. மூலதனம் சேரும் வேகம் பொருளாதார வளர்ச்சியை மிஞ்சும் போது வருவாய் சமனின்மை கூடுமென்று சொல்கிறது. வருவாய் சமனின்மை சிக்கலை எதிர்கொள்ள உலகளாவிய சொத்துவரி ஒன்றை அறிமுகம் செய்யவேண்டுமென்று சொல்கிறது.[2]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads