தாமிரம்(II) குளோரைடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காப்பர்(II) குளோரைடு அல்லது தாமிர(II) குளோரைடு என்பது CuCl2 என்ற வேதியியல் வாய்பாடு உடைய கனிமச் சேர்மம் ஆகும். வெளிர்ப் பழுப்பு நிறத் திடப்பொருள். இது மெதுவாக ஈரப்பதத்தை உறிஞ்சி நீல-பச்சை நிறமுடைய டைஐதரேட்டை உருவாக்குகிறது. தாமிர(II) சேர்மங்களில் தாமிர சல்பேட்டிற்கு அடுத்ததாக தாமிர(II) குளோரைடு உள்ளது.
இவை முறையே டோல்பாசைட்டு (tolbachite ) மற்றும் எரியோசால்சைட் (eriochalcite) என்ற இரண்டு அரிதான தாதுக்களில் இயற்கையாகவே நீரற்ற மற்றும் டைஐதரேட்டு வடிவங்களில் காணப்படுகின்றன.[2]
Remove ads
அமைப்பு
நீரற்ற தாமிர(II) குளோரைடு திரக்கப்பட்ட கேட்மியம் அயாேடைடு வின் வடிவத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த மையக்கருத்தின் அடிப்படையில் எண்முகி வடிவத்தின் மையத்தில் தாமிரம் உள்ளது. ஜான்-டெல்லர் விளைவினால் பெரும்பாலான தாமிர(II) சேர்மங்கள் எண்முகி அமைப்பில் இருந்து உருத்திரிபு அடைந்துள்ளன. மூலக்கூறு சுழல்தடத்தில் விரவி உள்ள ஒரு டி-எலெக்ட்ரான், ஒரு ஜோடி குளோரைடு ஈந்தணைவி உடன் வலிமையான எதிர் பிணைப்பில் உள்ளதை இது விவரிக்கிறது. CuCl2 · 2H2O இல் தாமிரம் மீண்டும் அதிகளவு உருத்திரிபு எண்முகி அமைப்பினைப் பெறுகிறது. தாமிரம் மையத்தில் இரண்டு நீர் ஈந்தணைவி மற்றும் நான்கு குளோரைடு ஈந்தணைவிகளால் சூழப்பட்டு மற்ற தாமிரத்துடன் மையத்தில் சமச்சீரற்ற பாலத்தின் மூலம் பிணைக்கப்பட்டுள்ளது.[3]
தாமிரம்(II) குளோரைடு பாரா காந்நத்தன்மை உடையது. 1944 ல் ஏவிசெனி சவாசுகி ( Yevgeny Zavoisky) என்பவரால் முதன் முதலில் இலத்திரான் பாரா காந்நத்தன்மை உடனிசைவைக் கண்டறிய CuCl2·2 H2O பயன்படுத்தப்பட்டது.[4][5]
Remove ads
பண்புகள் மற்றும் வினைகள்
தாமிர(II) சேர்மத்தின் செறிவு, வெப்பநிலை, மற்றும் கூடுதல் குளோைரடு அயனிகள் இவற்றைப் பொறுத்தே தாமிரம்(II) குளோரைடின் நீர்த்த கரைசல்கள் தயாரிக்கப்படுகின்றன. [Cu(H2O)6]2+ நீல நிறத்திலும் மற்றும் [CuCl2 + x] [6] வாய்பாட்டினைக் கொண்டுள்ள ஆலைடு சேர்மங்கள் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தினையும் கொண்டுள்ளன.
நீரார்பகுத்தல்
தாமிர(II) குளோரைடு கரைசலை காரத்துடன் சேர்க்கும் போது தாமிர(II) ஐதராக்சைடு வீழ்படிவாக கிடைக்கிறது.
: CuCl2 + 2 NaOH → Cu(OH)2 + 2 NaCl

பகுதியளவு நீரார் பகுக்கும்பொழுது தாமிர ஆக்சிகுளோரைடு கிடைக்கிறது. Cu2Cl(OH)3, ஒரு பிரபலமான பூஞ்சைக் கொல்லி.
Remove ads
தயாரிப்பு
தாமிரம்(II) குளோரைடு வணிக ரீதியாக தாமிரத்தை குளோரினேசன் செய்வதன் மூலம் பெறப்படுகிறது.
: Cu + Cl2 + 2 H2O → CuCl2(H2O)2
பாதுகாப்பு
காப்பர்(II) குளோரைடு நச்சுத் தன்மை உடையது. அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை குடிநீரில் 5 பிபிஎம் க்கு கீழே உள்ள செறிவினை மட்டுமே அனுமதிக்கின்றன.
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads