தாய்

பெற்றவள்; ஈன்றவள்;அம்மா, அன்னை From Wikipedia, the free encyclopedia

தாய்
Remove ads

ஆண் - பெண் என இருபாலினருக்கிடையிலான பாலுறவின் மூலம் பிறக்கும் குழந்தைக்குப் பெண் பாலினமாக இருப்பவள் தாய் எனப்படுகிறாள். உயிரியல் அல்லது சமூக நோக்கில் ஒரு குழந்தையை ஈன்றெடுக்கும் பெண் தாய் (mother) அல்லது அன்னை எனப்படுவார். தமிழில் அம்மா, அன்னை, ஆய் போன்ற சொற்கள் தாயைக் குறிக்கப் பயன்படுகின்றன.

Thumb
ஒரு சிக்கிமிய தாயும் சேயும்
Thumb
ஆடும் குட்டியும்
Thumb
மெக்சிக்கோ நகரத்தில் உள்ள நினைவுத் தூண் - "நம்மைச் சந்திக்கும் முன்னரே நம்மை நேசிப்பவளுக்காக" என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.
Thumb
அணில் தாயின் அன்பு கூண்டில் அடைபட்டது போல் தன் பிள்ளை மீது

மனிதனைப் போன்ற பாலூட்டிகளில் தாய், கரு உண்டாவதில் இருந்து கரு குழந்தையாக வளர்ச்சி பெறும் வரை தன் கருப்பையில் தாங்கியிருக்கிறாள். குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் இருவருக்கும் மற்ற உறவினர்களுக்கும் பங்குகள் இருந்தாலும், தாய்க்கு சிறப்பான பங்கு உண்டு.

யானைகளில், யானைக்குட்டிக்கு அத்தியாவசியத் தேவைகள் உணவு, பாதுகாப்பு மற்றும் தாயன்பு தான். ஒரு வேளை தாய்ப்பால் கிடைக்காத நிலை ஏற்பட்டால் குட்டி வாழும் வாய்ப்பு குறைகிறது. ஆயினும் ஒரு யானைக்குட்டி மிக மோசமாக பாதிக்கப்படுவது தனிமையால் தான்.[1]

Remove ads

அம்மா சொல் உருவாக்கம்

தமிழ்மொழியில் உள்ள சொற்கள் தோன்றிய விதம் பற்றி ஆராயும் பொழுது அம்மா என்னும் சொல் எவ்வாறு உருவாகியிருக்கலாம் என்பதை இங்கே காணலாம்.

தமிழ்ச் சொற்கள் பெரும்பாலும் எழுப்பப்பட்ட ஓசைகளின் சொற்களாகவே காணப்படுகின்றன. கூ கூ என்று கூவிய கூகை, குர்குர் என ஒலித்த குரங்கு, கர் கர் என உறுமிய கரடி, சர சரவென ஓடிய சாரை என பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.

இவ்வகையில் அம்மா என்ற சொல்லும் இயற்கையில் தோன்றிய ஒன்றாகும். பிறந்த குழந்தை அழுவதும், சிரிப்பதுமாக வாயை மூடி மூடித் திறக்கின்றது. குழந்தை வாயைத் திறக்கும் போது அ என்ற ஒலி எழுகின்றது. வாயை மூடும் போது ம் என்ற ஒலி எழுகின்றது. ம்+அ. ம்ம -ம்ம -என்ற ஒலி மீண்டும் மீண்டும் வெளிவரும் போது அது அம்மா என்ற சொல்லைத் தருகின்றது.

அம்மா இயற்கையாகவே தோன்றிய சொல்லாகும். அம்ம, அம்மு, அம்மை போன்ற சொற்கள் அம்மா என்ற சொல்லுக்குப் பிறகு தோன்றியவைகள். தாய் என்ற சொல் ஆய் என்ற சொல்லின் நீட்சியாகும். ஆய்=அம்மா பாட்டி, பாலமுதைத் தந்த ஆய், தாய் எனப்பட்டாள். குழந்தையை அள்ளி எடுத்து அணைக்கும் தாய், அன்னையெனப்பட்டாள். தமிழகத்தில் சில கிராமங்களில் அம்மா எனும் சொல்லை ஆத்தா எனவும் குறிப்பிடுவர்.

ஆய், தாய், அன்னை, அம்மை ஆகியவைகள் யாவும் பிற்காலச் சொற்களே. அம்மா+ஆய்ச்சி=அம்மாச்சி. அம்மா என்ற தமிழ்ச் சொல் மா - மாதா -மதத்ரு என்றவாறு வடமொழியில் திரிந்தது எனலாம்.[2]

Remove ads

மேலும் பார்க்க

துணை நூற்பட்டியல்

  • ச, முகமது அலி; க, யோகானந்த் (நவம்பர் 2004). யானைகள் அழியும் பேருயிர். மேட்டுப்பாளையம்: மலைபடு கடாம் பதிப்பகம். p. 117.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads