தாய் மண்ணே வணக்கம் (நூல்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாய் மண்ணே வணக்கம் என்பது கோ. நம்மாழ்வார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூலாகும். இந்த புத்தகத்தின் மூன்றாம் பதிப்பு 2009ல் வெளிவந்துள்ளது.
கருத்துக்கள்
இந்த 127 பக்ககங்கள் கொண்ட புத்தகத்தில் அழிகின்ற காடுகள், அழிந்து வரும் நதிகள், பூச்சிக்கொல்லி,நிலவளம் மற்றும் மலைவளம் பற்றி நம்மாழ்வார் விரிவாக எழுதியுள்ளார். இதில் மொத்தம் 23 கட்டுரைகள் அமைந்துள்ளன. பல உச்ச நீதிமன்ற வழக்குகளையும், தேயிலைத் தோட்டங்களை கார்பரேட் நிறுவனங்கள் அபகரிப்பதைப் பற்றியும் எழுதியுள்ளார். டெஃறி அணை பற்றியும் அதனைச் சார்ந்த மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்பது பற்றியும் குறிப்பிடுகிறார்.
கடைசி பக்கத்தில் கே. பி. சசியின் பின்வரும் மேற்கோள்களுடன் முடிக்கிறார். மனித உடலில் 80 சதவிதம் தண்ணீர். உயிர் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரமே நஞ்சாகியுள்ளது. நம் எதிர் நிற்கும் கேள்வி என்ன? தண்ணீரின் தரம் எப்படி உள்ளது?
எதிர்காலத்தில் நாம் நடை போடுவதற்கு இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று குடிக்க தண்ணீர் இல்லாமல் சாக வேண்டும் மற்றொன்று தண்ணீர் குடிப்பதாலேயே சாக வேண்டும்.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads