தாராண்மை மக்களாட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாராண்மை மக்களாட்சி (Liberal democracy) என்பது மக்களாட்சி முறையின் ஒரு வடிவம் ஆகும். 21 ஆம் நூற்றாண்டில் இவ்வகை மக்களாட்சி உலகில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. தாராண்மை மக்களாட்சிக்கும், பொதுவுடமை மக்கள் குடியரசு அல்லது மக்கள் "மக்களாட்சி" போன்ற அரசாட்சி முறை வடிவங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. நேரடி மக்களாட்சி, பங்கேற்பு மக்களாட்சி போன்ற வடிவங்களில் இருந்தும் இது பெருமளவு வேறுபட்டுக் காணப்படுகின்றது. தாராண்மை மக்களாட்சி, பல்வேறு அரசியலமைப்பு வடிவங்களில் அமையக்கூடும். இது, ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, பிரான்சு போன்ற நாடுகளைப்போல் ஒரு குடியரசு அமைப்பில் அமையலாம். அல்லது ஐக்கிய இராச்சியம், எசுப்பெயின் போன்ற நாடுகளில் உள்ளது போல் அரசியல்சட்ட முடியாட்சி வடிவிலும் அமையலாம். இது, சனாதிபதி முறை, நாடாளுமன்ற முறை அல்லது இரண்டும் கலந்த முறை போன்ற அரசு முறைகளின் கீழும் அமைய முடியும்.
தாராண்மை மக்களாட்சி என்பதில் உள்ள "தாராண்மை" என்பது, ஆட்சியில், அரசியல் தாராண்மையியம் என்னும் கருத்தியலைப் பின்பற்றுவதைக் குறிக்கிறது. தாராண்மை மக்களாட்சிகளில், அரச அதிகாரத்திடம் இருந்து தனிமனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசியல் சட்டத்தின் மூலம் ஒழுங்குகள் செய்யப்படுகின்றன. இது முதன்முதலாக அறிவொளிக் காலத்தில் ஓப்சு (Hobbes), ரூசோ (Rousseau) போன்ற சமூக ஒப்பந்தக் கோட்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்டது.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads