தார்பார்க்கர் மாவட்டம்

பாக்கித்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் இடம்பெற்றுள்ள ஒரு மாவட்டமாகும். From Wikipedia, the free encyclopedia

தார்பார்க்கர் மாவட்டம்
Remove ads

தார்பார்க்கர் மாவட்டம் (Tharparkar District) என்பது பாக்கித்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் இடம்பெற்றுள்ள இருபத்தி ஒன்பது மாவட்டங்களில் இதுவும் ஒரு மாவட்டமாகும். மேலும் இம்மாகணத்திலுள்ள மாவட்டங்களில் நிலப் பரப்பளவில் மிகப்பெரிய மாவட்டமும் இதுவேயாகும்[2][3][4]. மித்தி என்ற நகரம் இதன் தலைநகரமாகும். சிந்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் இம்மாவட்டம் மிகக் குறைந்த மனித வளர்ச்சி குறியீட்டைக் கொண்டுள்ளது. தார்பார்க்கர் மாவட்டத்திலிருந்து தொடங்கும் பாக்கிஸ்தானிய தார் பாலைவனம் ஒரு வளமான பகுதியாகும். இப்பகுதியில் வாழும் தாரிய மக்களின் வாழ்வாதாரம் மழைப்பொழிவு விவசாயத்தைச் சார்ந்தே உள்ளது[5]. உலகிலேயே வளம் மிக்க பாலைவனம் தார்பார்க்கரில் உள்ள தார்ப்பாலைவனம் ஒன்றே என்று கருதப்படுகிறது[6].

விரைவான உண்மைகள் தார்பார்க்கர் மாவட்டம்Tharparkar District ضلعو ٿرپارڪر, நாடு ...

இந்தோ-ஐரோப்பிய மொழி குடும்பத்தின் இந்தோ-ஆரியக் கிளையிலுள்ள ராசத்தானி மொழிகளில் ஒன்றான தாட்கி மொழி தார்பார்க்கர் மாவட்டத்தில் பேசப்படும் உள்ளூர் மொழியாகும். மார்வாரி சிந்தி மொழிக்கு மிக நெருக்கமாக உள்ள தாட்கி மொழியை உருது மற்றும் பஞ்சாபி பேசும் குடிமக்களும் புரிந்து கொள்கிறார்கள்.

Remove ads

மதம்

1998 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் இசுலாமியர்கள் 59 சதவீதமும் இந்துக்கள் 41 சதவீதமும் தார்பார்க்கர் மாவட்டத்தில் இருந்தனர்[7]. 1947 ஆம் ஆண்டில் பாக்கித்தான் சுதந்திரம் அடைந்தபோது இம்மாவட்டத்தின் மக்கள் தொகையில் இந்துக்கள் 80 சதவீதம் பேரும் இசுலாமியர்கள் 20 சதவீதம் பேரும் இருந்தனர். 1965 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில், இந்தியா மற்றும் பாக்கிஸ்தானுக்கு இடையிலான மக்கள்தொகை பரிமாற்றம் நிகழ்ந்தது. ஆயிரக்கணக்கான இந்துக்கள் (குறிப்பாக உயர் வர்க்க கம்யூனிச மக்கள்) பாக்கித்தானிய தார் பாலைவனப் பகுதியிலிருந்து இந்திய தார் பாலைவனப் பகுதிக்கு குடிபெயர்ந்தனர். 3,500 இசுலாமியக் குடும்பங்கள் இந்தியப் பகுதியிலிருந்து பாக்கிஸ்தான் தார் பகுதிக்கு மாறி குடிபெயர்ந்தனர்[8][9][10]. இசுலாமியக் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 12 ஏக்கர் நிலம் வீதம் மொத்தமாக 42000 ஏக்கர் நிலம் அப்போது வழங்கப்பட்டது[8].

Remove ads

இந்து கோயில்கள்

செல்கார்

  1. சிறீ தேவி மாதா மந்தர்
  2. சிறீ முர்ளி மந்தர்
  3. சிறீ இராமாபி மந்தர்
  4. சிவ மந்தர் செல்கார்

மித்தி

  1. லோகேசு மந்தர்
  2. சந்தோசி மா மந்தர்
  3. சிறீ அனுமன் மந்தர்
  4. சிறீ கிருட்டிணா மந்தர்
  5. சிறீ முரிதர் மந்தர்
  6. சிவ பார்வதி மந்தர்
  7. சிறீ பிர் பித்தோரோ மந்தர்
  8. சிறீ இராமா பிர் மந்தர்
  9. சிறீ குருநானக் தர்பார்

தார்பார்க்கர் மாவட்டத்திலுள்ள பிற முக்கிய இடங்கள்

  1. நாகர்பார்க்கர் நகரிலுள்ள சூரியோ யாபால் துர்கா கோயில்
  2. குரியில் உள்ள குரி மந்தர்
  3. கிருட்டிணா மந்தர் காண்டியோ தார்பார்க்கர்
  4. நாகர்பார்க்கர் கோயில்கள்
  5. காகா கிராமத்திலுள்ள ஆசுத்தான் சிறீ தேவாள் மாதா கோயில்

கல்வி

2017 ஆம் ஆண்டின் பாக்கித்தான் மாவட்டக் கல்வித் தரம்

2017 ஆம் ஆண்டின் பாக்கித்தான் மாவட்ட கல்வி தரவரிசையின் படி தார்பார்க்கர் மாவட்டத்தின் கல்வித்தரம் நூற்றுக்கு 30 மதிப்பெண்கள் என்ற அளவில் இருந்தது. கற்றல் மதிப்பெண், தக்கவைக்கும் மதிப்பெண் மற்றும் பாலின சமநிலை மதிப்பெண் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இக்கல்வித்தரம் இருந்தது.

தார்பார்க்கர் மாவட்டத்தின் தக்கவைப்பு வீதம் வெறும் 26 என்ற அளவிலேயே இருந்தது. அதே நேரத்தில் இம்மாவட்டத்தின் பாலினச் சமநிலை மதிப்பு 64 என்ற அளவில் இருந்தது [11].

Remove ads

உள்கட்டமைப்பு குறைபாடுகள்

தரவரிசைக்குட்படுத்தப்பட்ட 155 பாக்கித்தானிய மாவட்டங்களில் நடுநிலைப்பள்ளி உள்கட்டமைப்பு வசதிகளுக்கான தரவரிசை மதிப்பீட்டில் தார்பார்க்கர் மாவட்டம் 128 ஆவது இடத்தைப் பெறுகிறது. பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த அடிப்படை வசதிகள் மற்றும் பள்ளிக் கட்டடங்களின் நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி இம்மதிப்பீடு நடத்தப்பட்டது. பள்ளிகளில் மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாமையும் திருப்தியற்ற அபாயகரமான பள்ளி கட்டடங்களும் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு அக்கறை செலுத்தவேண்டிய அம்சங்களாக நீடித்திருக்கின்றன[11].

தார்பார்க்கர் மாவட்டத்தில் இருக்கும் 200 பள்ளிகள் தற்காலிகமாக இயங்காத பள்ளிகளாகும். 78 பள்ளிகள் மூடப்படக்கூடிய நிலையில் செயல்படுகின்றன. இம்மாவட்டத்தின் 170 பள்ளிகள் நிரந்தரமாக இயங்காத நிலைக்குச் சென்றுவிட்டன. 345 பள்ளிகள் பாதுகாப்பான இடவசதிக் குறைவுடன் இயங்குகின்றன. மொத்தமுள்ள 3439 பள்ளிகளில் 1929 பள்ளிகள் ஒரு வகுப்பறை பள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். மாவட்டத்தில் 22 பள்ளிகளில் மட்டுமே அறிவியல் ஆய்வக வசதியைப் பெற்றுள்ளன. 3413 பள்ளிகளில் நூலகம் ஏதும் கிடையாது.

பாலின வேறுபாடு

10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது கொண்டவர்களின் மக்கள் தொகையில் ஆண்களில் 54% பேரும் பெண்களில் 21% பேரும் மட்டுமே படிப்பறிவு கொண்டவர்களாக இருந்தனர். மாவட்டத்தில் இருந்த மொத்தப் பள்ளிகளில் 21% பாடசாலைகள் மட்டுமே பெண்களுக்கான பாடசாலைகளாகும். பள்ளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்த காரணத்தால் வகுப்புகளின் நிலை உயர உயர பள்ளிகளிள் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறிப்பாக வகுப்பு 5 முதல் வகுப்பு 6 வரையும் வகுப்பு 8 முதல் 9 ம் வகுப்பு வரையும் குறைவதைப் பார்க்க முடிகிறது. ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை இதில் அதிகமாக இருந்தது. இம்மாவட்டத்தில் பயிலும் ஒட்டுமொத்த மானவர்களில் பெண்களின் சதவீதம் 34 சதவீதம் மட்டுமேயாகும்.

சிறுவர்களுக்காக உள்ள 2,506 பள்ளிகளுடன் ஒப்பிடுகையில் சிறுமிகளுக்கு வெறும் 673 பள்ளிகள் மட்டுமே உள்ளன, சிறுவர்களுக்கு 182 நடுநிலைப்பள்ளிகள் உள்ள நிலையில் சிறுமிகளுக்கு 31 பள்ளிகளும், சிறுவர்களுக்கான 33 உயர்நிலைப்பள்ளிகளுடன் ஒப்பிடுகையில், சிறுமிகளுக்கு 7 உயர்நிலைப் பள்ளிகளும் மட்டுமே உள்ளன என்பது கவனிக்கத்தக்கது ஆகும். தார்பார்க்கர் மாவட்டத்தில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஏதுமில்லை.

Remove ads

கற்றல் விளைவுகள்

2013-2018 ஆம் ஆண்டுக் காலத்தில் சிந்து மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் விளைவாக 2018-2023 ஆம் ஆண்டிற்கான வெற்றி தோல்வி சவால்கள் அறிக்கை தரமான சோதனைத் தேர்வுகல் மூலமாக 2017 ஆம் ஆண்டு சிந்து மாகாண அரசாங்கத்தால் வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையின் தரவுகள் தெரிவித்தபடி தார்பார்க்கர் மாணவர்கள் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களின் அடிப்படையில் இம்மாவட்டத்தை முதல் 10 மாவட்டங்களில் இடம்பிடிக்கச் செய்தனர். ஆனால் மொழிப்பாடங்களில் இவர்கள் பின்தங்கியே இருந்தனர். 8 ஆம் வகுப்பு கணிதப் பாடத்தில்,தார்பார்க்கர் மாவட்ட மாணவர்கள் முதலிடம் பெற்றனர்[12].

Remove ads

தார்பார்க்கர் அறிவியல் திருவிழா

தார்பார்க்கர் மாவட்ட மாணவர்கள் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அலிஃப் ஐலான் உதவியுடன் நடைபெற்ற தார் அறிவியல் திருவிழாவில் தங்களின் கணிதம் மற்றும் விஞ்ஞான ஆர்வத்தை நிருபித்தனர் [13][14] தார்பார்க்கர் மாவட்ட கல்வி அமைப்பினரும் மற்றும் பல அமைப்பினரும் ஒருங்கிணைந்து 15000 மாணவர்களுக்கு அதிகமான மாணவர்கள் பங்குபெற்ற அறிவியல் திருவிழாவை நடத்தினர் [15]. இதற்காக அரசு மற்றும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் தலைநகரமான மித்தி நகருக்கு பயணம் செய்து வந்து சேர்ந்தனர். அச்சு, மின்னியல், எண்ணிம ஊடகத்தினர் இவ்விழாவை விரிவாக படம் பிடித்தனர். விழாவைப் பற்றி மாவட்டப் பொது மக்கள், அறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பாராட்டுகள் தெரிவித்தனர் [16].

Remove ads

குடிமக்களின் எதிர்பார்ப்பு

மாவட்டத்திலுள்ள கல்வி ஆர்வலர்களும் இளம் தலைவர்களும் தாலீம்டூ செயலியில் பல்வேறு கல்வி பிரச்சினைகளை பதிவேற்றி வருகின்றனர். அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளும் ஆசிரியர்கள் மற்றும் அரசுக்கிடையிலான பிரச்சினைகளும் எங்கும் நிறைந்துள்ளன. பல பள்ளிக்கட்டிடங்கள் செல்வாக்கு மிகுந்த நிலச் சொந்தக்காரர்களால் தனியார் விடுதிகளாகச் செயல்பட்டு வருகின்றன. தரமான ஆசிரியார்கள் பற்றாக்குறையும் அவர்களின் வருகையும் மிகப்பெரிய சிக்கல்களை உண்டாக்கி பள்ளிகள் மூடப்படுவதற்கு காரணமாகின்றன[17]. பொதுவாக தார்பார்க்கர் மாவட்டத்தின் கல்வி நிலை மிக மோசமான நிலையில் உள்ளது. தொடர்புள்ள அதிகாரிகள் இச்சிக்கல்களின் மீது அக்கறை செலுத்தி செயல்பட வேண்டிய கட்டாயத்தில் மாவட்டம் பின்னடைந்திருக்கிறது.

Remove ads

நிர்வாகம்

நிர்வாக நலனை முன்னிட்டு மாவட்டம் ஏழு தாலுக்காக்களாகப் பிரிக்கப்பட்டு இயங்குகிறது.[18]

  • மித்தி
  • டிப்ளோ (பாக்கித்தான்)
  • இசுலாம்கோட்
  • சாக்ரோ
  • தாக்லி
  • நாகர்பார்க்கர்
  • கலோய்

நகரங்கள்

  • செல்கார்
  • காண்டியோ
  • கலோய்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads