திட்டக் குமுகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

திட்டக் குமுகம் என்பது தனது நோக்கங்களை கொள்கைகளை வழிமுறைகளை திட்டமிட்டு அமைக்கப்படும் ஒரு குழுவாழ்க்கை குடியிருப்பு குமுகம் ஆகும். கூட்டறவு குமுகங்கள், பசுமைக் கிராமங்கள், தோழமைக் குழுமங்கள் (communes), ஆச்சிரமங்கள் என பல தரப்பட்ட திட்டக் குமுகங்கள் உண்டு. இவை குடும்ப அல்லது குல/சாதி அமைப்பைச் சார்ந்த குமுகங்களுடன் ஒப்பிட்டு வேறுபாடு காட்டத்தக்கவை.

வரலாறு

திட்டக் குமுகங்கள் பண்டைக் காலத்தில் இருந்து தொடர்ந்து இருந்து வரும் ஒரு சமூக அமைப்புத்தான். குறிப்பாக சமய குமுகங்கள் அல்லது ஆச்சிரமங்கள் இப்படிப்பட்டவை.

தற்கால திட்டக் குமுகங்கள் பொது வாழ்முறைகளில் இருந்து வேறுபட்ட மாற்று வாழ்முறையின் தேடலாக தோன்றின. மேற்குநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் 1960 களில் இடம்பெற்ற சமூகப் புரட்சி பல பரிசோதனைச் சமூகங்களை தோற்றுவித்தன. நுகர்வுப் பண்பாடு, வேலைப் பளு, விரக்தி, சூழல் சீர்கேடு, தனிமைப்படுத்தல் என பல உந்தல்களால் இந்த திட்டக் குமுகங்கள் விரும்பப்பட்டன. சமவுரிமை, பொதுவுடமை என பல புரட்சிகர கொள்கைகளுடன் பல திட்டக் குமுகங்கள் அமைக்கப்பட்டன. கோட்பாட்டு நோக்கில் சிறப்பாக தோன்றும் பெரும்பாலன இத் திட்டச் குமுகங்கள் நடைமுறையில் சவால்களைச் சந்தித்து பெரும்பான்மை தோற்றுப் போன. எனினும் பல திட்டக் குமுகங்கள் தம்மைப் வெற்றிகரமாக பேணின. தற்காலத்தில் திட்டக் குமுகங்களை நடைமுறைப் படுத்துவது தொடர்பான அறிவு பெருகி இருக்கிறது.

Remove ads

பண்புகள்

திட்டக் குமுகங்கள் பொது சமூக குமுகங்களில் இருந்து பல வழிகளில் வேறுபட்டவை. இவற்றுள் பல வகை உண்டு, அதனால் பொதுமைப்படுத்தி கருத்துக் கூறுவது சிக்கலானது. சமூகநீதி, சூழல்பேணல், சமயம், பரிசோதனை என பல நோக்களை உடையவை. இவற்றின் கட்டமைப்பும், சூழலும் பல வகைப்பட்டவை. எடுத்துக்காட்டாக பெரும்பாலான ஆச்சிரமங்கள் குரு சீடர் என்ற் இறுகிய அதிகாரக் படிநிலை கொண்டவை. மேற்குநாடுகளில் அமைக்கப்படும் தோழமைக்குமுகங்கள் (Communes) அதிகார படிநிலை அற்று அல்லது மிகக்குறைந்து கூடிய சமத்துவம் கொண்டவை.

Remove ads

இவற்றையும் பாக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads