திண்டிவனம் இலட்சுமி நரசிம்மர் கோவில்
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
திண்டிவனம் அருள்மிகு ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத ஸ்ரீ இலட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கோவில் இந்தியாவில். தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தின். திண்டிவனம் மாநகரில் மத்தியில் அமையப் பெற்றுள்ளது.
Remove ads
திருக்கோவில் சிறப்பு
திருமகள் நரசிம்மரின் இடத்தொடையில் அமர்ந்த படி தன் இரு கரங்கள் கூப்பி இறைவனை வழிபடுகிறார். இங்கு அனுமன் சங்கு சக்கரம் தாங்கிய வண்ணம் காட்சியளிக்கிறார்.
சிறப்புத் திருவிழாக்கள்:
நரசிம்ம ஜெயந்தி, வைகாசி மாத முழுமுதற்பெருவிழா (பிரமோற்சவம்)
வரலாறு
“ | கிடந்தநாள் கிடந்தாய் எத்தனை காலம்கிடத்தி உன்திருவுடம்பு அசைய தொடர்ந்து குற்றேவல்செய்து தொல்லடிமை வழிவரும் தொண்டரோர்க்கு அருளி தடங்கொள் தாமரைக்கண்விழித்து நீஎழுந்து உன்தாமரை மங்கையும் நீயும் இடங்கொள் மூவுலகும் தொழ இருந்தருளாய் திருப்புளிக்குடிக் கிடந்தானே" (3686) -நம்மாழ்வார் சுவாமிகள் | ” |
புளிக்குடிலில் (திந்திரீவனத்தில்) திண்டி, முண்டி, கிங்கிலி, கிலாலி ஆகிய அசுரர்கள் இவ்வனத்தில் தவம் செய்யும் முனிவர்களுக்கு ஓயாது கொடுங்செயல் செய்தமையால் முனிவர்கள் ஸ்ரீ இலட்சுமி நரசிம்மரை வழிபட இறைவன் அனுமனுக்கு சங்கு சக்கரம் அளித்து அழித்தொழிக்க ஆணையிட்டார். அதன்படி அனுமன் போரில் வென்றார், ஆகையால் இக்கோவிலில் அனுமன் சங்கு சக்கரம் தாங்கிய வண்ணம் எழுந்தருளியுள்ளார்.
கோயில் அமைப்பு
கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம். கனகவல்லி தாயார், கோதண்ட ராமர், இலட்சுமி ஹயகிரீவர், விஷ்ணுதுர்கை, வேணுகோபால், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் திண்டிவனம் முதன்மைப் பெரிய திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் திண்டிவனம் வட்ட இந்துசமய அறநிலையத்துறையின் தலைமை கோவிலாக விளங்குகிறது.
மேற்கோள்கள்
- த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதி
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads