திமா ஹசாவ் மாவட்டம்

அசாமில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

திமா ஹசாவ் மாவட்டம் அசாமில் உள்ளது. இது அசாமில் உள்ள மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகையைக் கொண்டது. முன்னர், வடக்கு காசார் மலை மாவட்டம் என்று அழைக்கப்பட்டது.[1] திமா ஹசாவ் என்றால் திமாச மொழியில் திமாசா மலை என்று பொருள்.

விரைவான உண்மைகள் திமா ஹசாவ் மாவட்டம் ডিমা হাছাও জিলা, நாடு ...
Remove ads

புவிப்பரப்பு

இதன் தலைமையகத்தை ஹாபலாங் நகரில் அமைத்துள்ளனர். இந்த மாவட்டத்தின் பரப்பளவு 4888 சதுர கிலோமீட்டர் ஆகும்.[2]

அரசியல்

இது தன்னாட்சிப் பகுதிகளில் ஒன்று. திமா ஹசாவ் தன்னாட்சிக் குழுவின் ஆட்சிக்கு உட்பட்டது. இந்தக் குழுவிற்கான நபர்களை திமா ஹசாவ் மாவட்ட மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். எந்தக் கட்சி அதிக உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறதோ, அது ஆளுங்கட்சியாகத் தேர்வாகும். அரசின் பெரும்பாலான துறைகளை இந்த ஆட்சிக் குழு நிர்வகிக்கும். சட்டம், ஒழுங்கு, காவல் துறை ஆகியவற்றை அசாம் மாநில அரசு பார்த்துக் கொள்ளும்.

பொருளாதாரம்

வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டம் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு அரசு நிதியையும் பெறுகிறது.[3]

மக்கள் தொகை

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது 213,529 மக்கள் வாழ்ந்தனர்.[1] சராசரியாக சதுர கிலோமீட்டருக்குள் 44 பேர் வாழ்கின்றனர்.[1] பால் விகிதக் கணக்கெடுப்பில், ஆயிரம் ஆண்களுக்கு 931 பெண்கள் இருப்பதாகத் தெரிகிறது,[1] இங்கு வாழ்பவர்களில் 78.99% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[1]

திமாசா மக்கள், சீமீ நாகா, ஹிமார், குக்கீ, பியாத், ஹிராங்கவல், வைபேய், கர்பி ஆகிய இனங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர்.

Remove ads

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads