திரவ இயக்கத் திட்ட மையம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

திரவ இயக்க திட்ட மையம் (Liquid Propulsion Systems Centre) இந்திய விண்வெளித்துறையின் கீழ் வருகின்ற ஒரு தனித்து இயங்கும் ஓர் மையமாகும். இதன் தலைமையிடம் திருவனந்தபுரத்தில் உள்ள வலியமலா ஆகும். இதன் கிளைகள் தமிழ் நாட்டிலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த மகேந்திரகிரியிலும், பெங்களூருவிலும் அமைந்துள்ளன. இம் மையத்தில் திரவ எரிபொருளால் இயங்கும் ராக்கெட் இன்ஜின்கள் வடிவமைக்கப்படுகின்றன.

வலியமலா

இது இம்மையத்தின் தலைமையகமாக விளங்குகின்றது. இங்கு திரவ இனஜின்களின் வடிவமைப்பு, மற்றும் ஆராய்ச்சி நடைபெறுகிறது. இங்கு சுமார் 800 பேர் வேலைப் பார்க்கிறார்கள்.

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 47க்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது. இங்கு 600 பேர் நிரந்தரமாகவும் 1000 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாகவும் வேலை பார்த்து வருகிறார்கள். கடுங்குளிர் இயந்திரம் உருவாக்கம் மற்றும் அதன் சோதனை, திரவ செலுத்து வாகனம் உருவாக்குதல், ஒருங்கிணைத்தல் மற்றும் சோதனை செய்து தகுதிப்படுத்துதல் ஆகிய பணிகள் இங்கு நடைபெற்று வருகின்றன.[1]

Remove ads

பெங்களூரு

செயற்கைக்கோள்களுக்கான சிறிய உந்து இயந்திரங்கள் இங்கே செயல்வடிவம் பெறுகின்றன.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads