திராவிடப் பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திராவிடப் பல்கலைக்கழகம் (Dravidian University) இந்தியாவில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இது 1997-ம் ஆண்டு ஆந்திரப் பிரதேச அரசால், தமிழ்நாடு, கர்நாடகம், கேரள அரசுகளின் உதவியுடன் அமைக்கப்பட்டது. மொழிக் கல்விக்கும், சமூக நல்லுணர்வுக்கும் பணிபுரிவதற்காக இந்தப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. ஒரு மொழிக் குடும்பத்திற்காக இந்தியாவில் செயல்படும் ஒரே பல்கலைக்கழகம் இதுவாகும். இப்பல்கலைக் கழகத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற திராவிட மொழித் துறைகளும், திராவிடவியல் தொடர்பான வரலாறு, மொழியியல், தத்துவம், நாட்டுப்புறவியல் மற்றும் அறிவியல் சார்ந்த துறைகளும் உள்ளன. பதிப்புத்துறை மூலம் பல ஆய்வு நூல்களை இப்பல்கலைக்கழகம் வெளியிட்டு வருகிறது.[1][2][3]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads