திரிஷா கிருஷ்ணன்
இந்தியத் திரைப்பட நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
திரிஷா கிருஷ்ணன் இயற்பெயர் அனுராதிகா கிருஷ்ணரத்னம் (பிறப்பு - மே 4, 1983, சென்னை) தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட முன்னணி கதாநாயகி ஆவார். இவர் நடித்த சாமி, கில்லி போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. இவர் திரைக்கு வருவதற்கு முன்பு ஆரம்பகாலத்தில் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
- இவரது இயற்பெயர் அனுராதிகா மேலும் இவர் திரையுலகிற்கு வருவதற்கு முன்பே மாடலிங் மற்றும் விளம்பர படங்களில் நடிக்கும் போதே "திரிஷா" என்று பெயர் மாற்றி கொண்டு நடித்தார்.
- இவர் சென்னையில் ஒரு மலையாள பிராமணர் குடும்பத்தில் கிருஷ்ணரத்னம் ஐயர் (கிருஷ்ணன்)–உமாபாரதி (உமா) இணையாருக்கு மகளாக பிறந்தார்.
- இவரது தந்தை ஆரம்பகாலத்தில் சென்னையில் ஒரு பெரிய நட்சத்திர உணவகத்தில் கணக்காளராக வேலை செய்து வந்தார்.
- அதே சமயத்தில் திரிஷா படிக்கும் வயதில் இருந்தே பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் நடத்தப்படும் பல நாடக போட்டிகளில் கலந்து கொண்டு தனது நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டினைப் பெற்றார்.
- அதை உணர்ந்த தாயார் உமா அவர்கள் தனது மகளின் நடிப்பு திறமையை கண்டறிந்து திரையுலகில் ஒரு பெரிய நட்சத்திரநாயகியாக ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல திறன் போட்டிகளில் அனுராதிகாவை (திரிஷா) களமிறக்கினார்.
Remove ads
திரைப்படங்கள்
Remove ads
விருதுகள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads